மயிலாடுதுறை: மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர் சுதா அதிமுக வேட்பாளர் பாபுவைவிட 271183 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதள விபரம்...
வ.எண் | வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
1 | சுதா | காங்கிரஸ் | 5,18,459 |
2 | பாபு | அதிமுக | 2,47,276 |
3 | ம.க.ஸ்டாலின் | பா.ம.க | 1,66,437 |
4 | காளியம்மாள் | நா.த.க | 1,27,642 |
- மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி கட்சியிலுள்ள காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் சுதா 4,71,313 வாக்குகளும், அதிமுக பாபு 2,23,100 வாக்குகளும், பாமக ம.க.ஸ்டாலின் 1,55,903 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி காளியம்மாள் 1,15,408 வாக்குகளும் பெற்றுள்ளனர். தற்போது காங்கிரஸ் வேட்பாளர் சுதா அதிமுக வேட்பாளர் பாபுவைவிட 2,48,213 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.
- மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி கட்சியிலுள்ள காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் சுதா 368097 வாக்குகளும், அதிமுக பாபு 167705 வாக்குகளும், பாமக ம.க.ஸ்டாலின் 122701 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி காளியம்மாள் 88722 வாக்குகளும் பெற்றுள்ளனர். தற்போது காங்கிரஸ் வேட்பாளர் சுதா அதிமுக வேட்பாளர் பாபுவைவிட 200392 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார் - 02.48 PM
- மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி கட்சியிலுள்ள காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் சுதா 148231 வாக்குகளும், அதிமுக பாபு 71235 வாக்குகளும், பாமக ம.க.ஸ்டாலின் 54552 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி காளியம்மாள் 36008 வாக்குகளும் பெற்றுள்ளனர். தற்போது காங்கிரஸ் வேட்பாளர் சுதா அதிமுக வேட்பாளர் பாபுவைவிட 77086 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார் - 11.54 AM
- மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி கட்சியிலுள்ள காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் சுதா இரண்டாம் சுற்று நிலவரப்படி முன்னிலை வகித்தார் - 10.37 AM
2024 மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் சுதா, பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக ம.க.ஸ்டாலின், அதிமுக சார்பில் பாபு, நாம் தமிழர் கட்சியின் சார்பில் காளியம்மாள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 17 பேர் களத்தில் உள்ளனர்.
2019 நிலவரம் என்ன?: 2019 நாடாளுமன்றத் தேர்தலில், மயிலாடுதுறை தொகுதியில் மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் திமுக வேட்பாளர் செ.ராமலிங்கம் 5 லட்சத்து 99 ஆயிரத்து 292 வாக்குகளைப் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எஸ்.ஆசைமணியை 2 லட்சத்து 61 ஆயிரத்து 314 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சுயேச்சை வேட்பாளர் எஸ்.செந்தமிழன் 69 ஆயிரத்து 30 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுபாஷினி 41 ஆயிரத்து 56 வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ரெபாயுதீன் 17 ஆயிரத்து 5 வாக்குகளையும் பெற்றனர். 27 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் அதிமுக வேட்பாளர் ஆசைமணியை தவிர்த்து மற்ற 25 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேர்தல் 2024: மயிலாடுதுறை தொகுதியில் மசூடம் சூடப் போவது யார்? களநிலவரம் என்ன? - LOK SABHA ELECTION 2024