ETV Bharat / state

இலங்கை அதிபருக்கு மயிலாடுதுறை எம்பி பரபரப்பு கடிதம்! - Mayiladuthurai fishermen

மயிலாடுதுறை மீனவர்கள், துரதிர்ஷ்டவசமாக கடலில் மூழ்கிய இலங்கை மீனவ சகோதரர்களின் உடல்களை மீட்டெடுக்க இலங்கை கடற்படைக்கு உதவியவர்கள். ஆபத்தில் உதவிய எங்கள் மீனவர்கள் மீது சொல்ல இயலாத அட்டூழியங்களை கட்டவிழ்த்துவிட்டு, சட்டவிரோதமாக கைது செய்துள்ளது என இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் எம்பி- ஆர்.சுதா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை புதிய அதிபருக்கு மயிலாதுறை எம்பி-ஆர்.சுதா கடிதம்
இலங்கை புதிய அதிபருக்கு மயிலாதுறை எம்பி-ஆர்.சுதா கடிதம் (Image Credits - x page @ R.Sudha and Anura Kumara Dissanayake)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2024, 1:55 PM IST

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை மீனவர்கள் 37 பேர் உள்பட அனைத்து இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி ஆர்.சுதா, இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள அனுரா குமார திசநாயகேவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு, 4 ஃபைபர் படகுகளில் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி 43 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களில் சிலர் இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த மீன்வளத்துறை பணி மேற்பார்வையாளர்கள் தீனதயாளன் மற்றும் வாசன் ஆகியோர், இதுகுறித்து பூம்புகார் துறைமுகத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதில், ஒரு விசைப்படகு மற்றும் இரண்டு ஃபைபர் படகுகளில் இருந்த, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள், சின்னமேடு கிராமத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள், சந்திரபாடி கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் ஆகிய 37 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது உறுதியானது.

இந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எஞ்சிய இரண்டு படகுகளில் 6 மீனவர்கள் தப்பி, பூம்புகார் துறைமுகம் வந்தடைந்தனர். தப்பி வந்த மீனவர்கள் கூறுகையில், "இந்திய கடற்பரப்பிலேயே நாங்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது அப்பகுதியில் இலங்கை மீனவரின் உடல் மிதந்துள்ளது.

இதுகுறித்து வாக்கி டாக்கியில் தகவல் தெரிவித்தபோது உடலை தேடி வந்த இலங்கை மீனவர்கள், சற்று நேரத்தில் வந்து விடுகிறோம் அதுவரை அந்த இடத்திலேயே இருங்கள் என கேட்டுக்கொண்டனர். அதன்படி சற்று நேரத்தில் அங்கு வந்த இலங்கை மீனவர்கள் இறந்த சக மீனவரின் சடலத்தை மீட்டனர்.

இதையும் படிங்க: ஆதவ அர்ஜூனா பேச்சு உட்கட்சி விவகாரம்! ஆ.ராசாவுக்கு திருமாவளவன் காட்டமான பதில்

அப்போது அவ்வழியே வந்த இலங்கை கடற்படையினர் பூம்புகார் மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக ஒரு விசைப்படகு மற்றும் இரு ஃபைபர் படகுடன் கைது செய்ததாகவும், துரிதமாக படகை திருப்பி அங்கிருந்து இரண்டு படகுகளில் இருந்த தாங்கள் 6 பேர் தப்பிவந்தவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், மீனவர்களின் உறவினர்கள் அனைத்து மீனவர்கள் மற்றும் படகுகளையும் பாதுகாப்பாக மீட்டுத்தருமாறு கண்ணீர்மல்க மயிலாடுதுறை எம்பி-ஆர்.சுதாவுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 37 மீனவர்கள் உள்பட இலங்கை சிறையில் உள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யக்கோரி இலங்கையில் புதிதாக அதிபர் பதவியேற்றுள்ள அனுரா குமாரா திசநாயகவுக்கு மயிலாடுதுறை எம்பி- சுதா கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் இலங்கையின் புதிய அதிபருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, மீனவர்கள் விவகாரம் தொடர்பாக எம்பி-சுதா விடுத்துள்ள கோரிக்கை: "மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பூம்புகார், சந்திராபாடி, வானகிரி, சின்னமேடு, மடத்துக்குப்பம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 37 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர்.

இவர்கள் படகு கவிழ்ந்ததில் துரதிர்ஷ்டவசமாக கடலில் மூழ்கிய இலங்கை மீனவ சகோதரர்களின் உடல்களை மீட்டெடுக்க இலங்கை கடற்படைக்கு உதவியவர்கள். இச்சூழலில் சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் இருதரப்பு உடன்படிக்கைகளில் உள்ள ஷரத்துகளை மீறி, இலங்கை கடற்படை ஆபத்தில் உதவிய எங்கள் மீனவர்கள் மீது சொல்ல இயலாத அட்டூழியங்களை கட்டவிழ்த்துவிட்டு, சட்டவிரோதமாக கைது செய்துள்ளது.

எனவே, அந்த மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இதேபோல், இலங்கை சிறையில் வாடும் இந்திய மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். மேலும் அவர்களின் அனைத்து படகுகளையும் கூடிய விரைவில் பயன்பாட்டு நிலையில் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.