ETV Bharat / state

சேதமடைந்த மூங்கில் பாலம்..ஆபத்தான முறையில் ஆற்றைக் கடக்கும் விவசாயிகள்.. தரங்கம்பாடி அருகே அவலம்! - mayiladuthurai - MAYILADUTHURAI

தரங்கம்பாடி அருகே கிள்ளியூர் - மாத்தூர் இடையில் செல்லும் மஞ்சள் வாய்க்காலில் பாலம் இல்லாததால் ஆபத்தான நிலையில் வாய்க்காலைக் கடந்து செல்வதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் விவசாயிகள்
ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் விவசாயிகள் (Photo Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2024, 6:34 PM IST

Updated : Sep 29, 2024, 6:53 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா கிள்ளியூர் ஊராட்சி மற்றும் மாத்தூர் ஊராட்சி இடையே மஞ்சளாற்றிலிருந்து பிரிந்து மஞ்சள் வாய்க்கால் செல்கிறது. கிள்ளியூர் ஊராட்சியில் வசிக்கும் ஏராளமான விவசாயிகளுக்கு சொந்தமான நிலம் மாத்தூர் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ளது.

பல நூறு ஏக்கரில் விவசாயம்: சுமார் 300 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் அந்தப் பகுதியில் உள்ளது. இந்நிலையில், சாகுபடிக்காக தங்கள் நிலங்களுக்குச் செல்ல வேண்டும் என்றால், மஞ்சள் வாய்க்கால் கடந்து சென்றால் சில மீட்டர் தூரத்திலேயே சென்று விடலாம். இதற்காக மூங்கில் பாலம் ஒன்றை அமைத்த விவசாயிகள், பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

மஞ்சல் வாய்க்கால் தொடர்பான பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

தற்போது இந்த மூங்கில் பாலம் சிதிலமடைந்து விட்டது. இதனால் ஐந்து கிலோ மீட்டர் தூரம் கிள்ளியூர், வெள்ளைத்திடல் மற்றும் மாத்தூர் ஊராட்சி படுகை கிராமம் வழியாக சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, இங்கு வடிகால் மற்றும் பாசன வாய்க்கால் உள்ளதால், தண்ணீர் அவ்வப்போது வந்து செல்கிறது. இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்குச் செல்வதற்கு ஆபத்தான நிலையில், மார்பளவு தண்ணீரில் வாய்க்காலைக் கடந்து விளைநிலங்ளுக்குச் சென்று வருகின்றனர். இருப்பினும், தங்கள் விளைநிலங்களுக்கு அறுவடை செய்த நெல்லையும் கொண்டு வருவது மற்றும் டிராக்டர் போன்ற இயந்திரங்களையும் வயல்களுக்கு கொண்டு செல்ல, சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் சுற்றியே செல்ல வேண்டிய நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனைபட தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: மழை நீரின் நடுவே உடல்கள் அடக்கம் செய்யும் அவலம்.. கொட்டாரம் பேரூராட்சி ஆதிதிராவிட மக்கள் வேதனை!

மேலும், கிள்ளியூர் ஊராட்சி அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூட சுற்றியே செல்ல வேண்டிய அவநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கர்ப்பிணிகள் மற்றும் புறநோயாளிகள் மட்டுமல்லாது பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் என பலரும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கூறுகின்றனர்.

கான்கிரீட் பாலம் அமைக்க கோரிக்கை: இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரமோகன் கூறுகையில், "மஞ்சள் வாய்க்காலில் குறுக்கே கான்கிரீட் பாலம் அமைக்கப்பட்டால், அருகில் உள்ள மாத்தூர், ஆக்கூர், திருவிடைக்கழி, செம்பனார்கோவில், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல ஏதுவாக இருக்கும்.

ஆனால், கடந்த பல ஆண்டுகளாக இங்கு பாலம் அமைப்பதற்கான கோரிக்கையை அரசு அதிகாரிகள் முதல் அரசியல் கட்சியினர் வரை என பலரிடம் புகார் மனு அளித்தும், இதுவரை எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. என்வே இந்த விவகாரத்தில் பொதுப்பணித்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, மஞ்சள் வாய்க்காலில் கான்கிரீட் பாலம் அமைத்துத் தர வேண்டு என கோரிக்கை விடுத்தார்.

Last Updated : Sep 29, 2024, 6:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.