ETV Bharat / state

இம்மாத இறுதியில் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கும் பட்டினப் பிரவேச விழா! - adheenam pattina pravesam - ADHEENAM PATTINA PRAVESAM

Dharmapuram Adheenam Pattina Pravesam: தருமபுரம் ஆதீனத்தை பக்தர்கள் பல்லக்கில் தூக்கும் நிகழ்வான பட்டினப் பிரவேச விழா இம்மாதம் 30ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தருமபுரம் ஆதீனத்தை பக்தர்கள் பல்லக்கில் சுமக்கும் புகைப்படம்
தருமபுரம் ஆதீனத்தை பக்தர்கள் பல்லக்கில் சுமக்கும் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 12, 2024, 5:01 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரத்தில் அமைந்துள்ள தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடத்தில், ஆண்டுதோறும் வைகாசியில் 11 நாட்கள் குருபூஜை விழா, பட்டினப் பிரவேச விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு தருமபுர ஆதீன மடத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா மே 20ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்க உள்ளது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான பதினோராம் நாள் திருவிழா மே 30ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில், தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை பக்தர்கள் சிவிகை பல்லக்கில் தூக்கிச் செல்லும் பட்டினப் பிரவேச நிகழ்வு நடைபெற உள்ளது.

முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற பட்டினப் பிரவேச நிகழ்வுக்கு மனிதனை மனிதன் சுமப்பதா எனக் கூறி, திராவிட இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் எனக் கருதி. அப்போதைய மயிலாடுதுறை கோட்டாட்சியர் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதித்திருந்தார்.

இதையும் படிங்க: சூலூரில் படுகள திருவிழா.. 13 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகலம்

இதற்கு பக்தர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இது குறித்து தகவலறிந்த மதுரை ஆதீனம், தானே நேரில் சென்று தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசத்தில் பல்லக்கைச் சுமப்பேன் என்றும், பாஜக தலைவர் அண்ணாமலையும் பல்லக்கை சுமக்கவுள்ளதாகவும் அறிவித்திருந்தார்.

அதனையடுத்து, கடும் எதிர்ப்புகள் அதிகரித்ததை அடுத்து, ஆதீன நிர்வாகத்திடம் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி கடிதத்தை பெற்றுக் கொண்டு பட்டினப் பிரவேச நிகழ்வுக்கு கோட்டாட்சியர் அனுமதி அளித்தார். அதன் பின்னர், அந்த ஆண்டு நடந்த பட்டினப் பிரவேச நிகழ்ச்சி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.

இதனிடையே, கடந்த ஆண்டு நடைபெற்ற பட்டினப் பிரவேசம் எந்தவித எதிர்ப்புகளும் இல்லாமல் அமைதியாக நடைபெற்றது. மேலும், தருமபுரம் ஆதீனம் தொடர்பான ஆபாச ஆடியோ, வீடியோ உள்ளதாகக் கூறி, அவரிடம் பணம் கேட்டு மிரட்டிய விவகாரத்தில் பாஜக மாவட்டத் தலைவர் அகோரம் என்பவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஸ்டாலின் முதல் விஜய் வரை சர்வதேச அன்னையர் தினம் வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.