ETV Bharat / state

23 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த பாலாலயம்.. களைகட்டிய ஸ்ரீ அபிராமி சமேத தான்தோன்றீஸ்வரர் கோயில்! - THIRUKKADAIYUR AMMAN TEMPLE

Mayiladuthurai Temple Balayam: மயிலாடுதுறை அருகே உள்ள சோழம்பேட்டை ஸ்ரீ அபிராமி சமேத தான்தோன்றீஸ்வரர் கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து சமய அறநிலையத்துறை நடத்தவிருக்கும் கும்பாபிஷேகத்திற்கு பாலாலயம் இன்று நடத்தப்பட்டது.

ஸ்ரீ அபிராமி சமேத தான்தோன்றீஸ்வரர் கோயிலில் நடந்த  பாலாலயம்
ஸ்ரீ அபிராமி சமேத தான்தோன்றீஸ்வரர் கோயிலில் நடந்த பாலாலயம் (PHOTO CREDITS- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 2, 2024, 8:08 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறைக்கு அருகே கல்லணையையும், பூம்புகாரையும் இணைக்கும் சாலையில் சோழம்பேட்டை என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அபிராமி அம்மன் திருகோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இந்தக் கோயிலில் கடைசியாக 2001ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

23 ஆண்டுகளுக்கு பிறகு கலைகட்டிய ஸ்ரீ அபிராமி சமேத தான்தோன்றீஸ்வரர் கோயில் பாலாலயம் (VIDEO CREDITS- ETV Bharat Tamil Nadu)

23 ஆண்டுகளாக நடத்தப்படாத கும்பாபிஷேகம்: அதனைத் தொடர்ந்து, 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் நடக்க முதல் பணியான பாலாலயம் எனப்படும் திருப்பணி தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதற்காக கோயிலின் பிரகாரத்தில் யாகம் வளர்க்கப்பட்டது.

மேலும், வேத மந்திரங்கள் ஓத, கோயிலில் உள்ள அம்மன் சிலைக்கு மகா பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடங்களில் பூஜைக்கு வைத்த புனித நீரை எடுத்து வந்து அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், கோயில் வளாகத்தில் பூமி பூஜை செய்து அடிக்கல் நட்டு, கும்பாபிஷேகத்திற்கான பணி தொடங்கப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

கோயில் உருவான கதை: “ஒரு ஆடி அமாவாசை நாள் அன்று சோழ மன்னன் ராஜராஜசோழன், திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி அம்மனை வழிபடச் சென்றுள்ளார். அப்போது வரும் வழியில் கடும் மழை, வெள்ளம் ஏற்பட்டதால் அவரது பயணத்தை தொடர முடியாமல் போனது. இதனால் வருத்தம் அடைந்த ராஜராஜசோழன், அந்த கிராமத்தில் இருந்த சுயம்பு லிங்கமான தான்தோன்றீஸ்வரர் சுவாமி சிலை முன்பு அமர்ந்து தியானம் செய்ததால், அம்பாள் நேரில் எழுந்தருளி ராஜராஜனுக்கு அருள் பாலித்தாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, இந்த கிராமத்திற்கு சோழன்பேட்டை என்னும் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அம்மன் நேரில் வந்து காட்சியளித்ததால் அதே இடத்தில் மன்னர் ராஜராஜசோழன் கருங்கல்லால் அபிராமி அம்மன் மற்றும் தான்தோன்றீஸ்வர் இருக்கும் வகையில் இந்த கோயிலைக் கட்டியதாக நம்பிக்கையும் உள்ளது.

இதையும் படிங்க: ஒரே நாளில் ஐந்து கோயில்களுக்கு கும்பாபிஷேகம்! மீனவ கிராமத்தில் நிகழ்ந்த ஆன்மீக பெருவிழா.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.