ETV Bharat / state

“கையால் பெயர்ந்து வரும் புதிய தார் சாலை"-தரமான சாலை அமைக்கும்படி மக்கள் கோரிக்கை! - POOMBUKAR NEW ROAD ISSUE

மயிலாடுதுறை மாவட்டம் மேமாத்தூர் பகுதியில் போடப்பட்ட தார் சாலை கையால் பெயர்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

புதியதாக போடப்பட்ட சாலை
புதியதாக போடப்பட்ட சாலை (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2024, 4:52 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே புதுப்பிக்கப்பட்ட சாலை தரமற்று அமைக்கப்பட்டிருப்பதால் கையால் சாலை பெயர்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பனார் கோவில் அருகே மேமாத்தூர் ஊராட்சியில் சிவன் கோவில் தெரு மற்றும் தெற்கு தெரு சாலை ஒரே சாலையாக உள்ளது. இந்த சாலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு செம்மண் கொண்ட கப்பி சாலையாக போடப்பட்டது.

கிராமவாசி சுதாகர் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில் மழைக்காலங்களில் சேரும் மண் மற்றும் சகதியால் தற்போது இந்த சாலை சேறு நிரம்பிய சாலையாக மாறியுள்ளது. இதனால் குடியிருப்புவாசிகள், விவசாயிகள் இப்பகுதியில் புதிய தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று அரசுக்கு பல முறை கோரிக்கை வைத்தனர்.

இது குறித்து கிராமவாசி சுதாகர் கூறுகையில், “இந்த 243 மீட்டர் தூரம் உள்ள சிவன் கோவில் சாலையை 2024-25ஆம் ஆண்டின் 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ் 6 லட்சத்து 27 ஆயிரத்து 523 ரூபாய் மதிப்பீட்டிலும், எஞ்சிய பகுதியான தெற்கு தெரு சாலை 2024 - 25ஆம் ஆண்டு பொது நிதியின் கீழ் 5 லட்சத்து 79 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பீட்டிலும் புதிய தார் சாலை ஒரு மாதத்திற்கு முன்பு போடப்பட்டது.

இதையும் படிங்க: ரயில் ஏறும் அவசரத்தில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை தவற விட்ட நபர்...மீட்டு ஒப்படைத்த கும்பகோணம் ரயில்வே போலீசார்!

ஆனால் தற்போது புதிதாக போடப்பட்ட தார் சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது. தார் சாலையை கையால் பெயர்த்தாலே சாலை பெயர்ந்து வருகிறது. எனவே, உடனடியாக மாவட்ட நிர்வாகம் தார் சாலையின் தரத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த சாலையை பெயர்த்து எடுத்து விட்டு தரமான தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.