மயிலாடுதுறை : இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றாகும். இந்த விழா நாடு முழுவதும் கொண்டாடப்படும். பொது இடங்களில் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழாவானது வரும் செப்டம்பர் 7ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கின்றது.
இதற்கான ஏற்பாடுகள் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் கோயில்கள் சார்பில் செய்யப்பட்டுள்ளன. மேலும், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விநாயகர் சிலை தயாரிப்பு: விநாயகர் சிலைகளை இயற்கையோடு ஒன்றிடும் வகையில், மரவள்ளிகிழங்கு மாவு, பேப்பர் கூழ், சிறு சிறு குச்சிகள், தேங்காய் நார் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கின்றனர். சிலைகளில் ரசாயண வண்ணங்களுக்குப் பதிலாக, வாட்டர் கலர் வண்ணங்களை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு கலர் வண்ணங்களைப் பயன்படுத்தி சிலைகள் விஜர்சனம் செய்யப்படும் போது தண்ணீர் மாசு ஏற்படாது.
வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பலரும் குடும்பம் குடும்பமாக வந்து இங்கேயே தங்கி, 1 அடி முதல் 10 அடி வரையிலான விதவிதமான கற்பக விநாயகர், எலி விநாயகர், லிங்க விநாயகர், உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அனைத்து பணிகளும் முடிவடைந்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கோயில்கள் மற்றும் பொது இடங்கள் ஆகிய இடங்கள் என மொத்தம் 395 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : விநாயகர் சதுர்த்தி விழா: ராஜபாளையத்தில் நடந்த விதவிதமான விநாயகர் சிலை ஊர்வலம் - vinayagar chaturthi 2024