வேலூர்: வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகானுக்கு, தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது. மன்சூர் அலிகான் வேட்புமனு தாக்கல் செய்யும் போது பலாப்பழம், லாரி, கிரிக்கெட் பேட் உள்ளிட்ட மூன்று சின்னங்கள் கேட்டிருந்தார். இந்நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர் "பலாப்பழம்" சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளார்.
பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது குறித்து மன்சூர் அலிகான் அளித்த பேட்டியில் "வேலூரில் பழுத்த பலா, வெயிலூரில் பழுத்த பலா, மக்களுக்கான இனிப்பான பலா, வெற்றியின் சின்னம் பலா, இந்த பலாச் சுளைகளை மக்கள் சுவைப்பார்கள். முக்கனிகளில் ஒன்றான பலாவைப் போன்று மக்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பேன். பலாச்சுளை சின்னம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
பலாவை பாலில் போட்டு, தேனில் போட்டு சுவைப்பது போன்று சின்னம் கிடைக்கிறது. டேனியல் பாலாஜி இறப்பு மிகவும் வருத்தம் அளிக்கிறது. டேனியலின் துக்க நிகழ்வுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. சின்ன வயதிலேயே அதிகம் பேர் இறப்பதற்கு காரணம், நஞ்சு உணவை உண்பது தான். நஞ்சு காய்கறிகள் உண்பதைத் தவிர்க்க வேண்டும்" என பேசினார்.
இதையும் படிங்க: சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது: அமைச்சர் துரைமுருகன்! - Minister Durai Murugan