ETV Bharat / state

திமுக பிரமுகர் எனக் கூறி ரூ.14.40 லட்சம் மோசடி.. வேலூரில் அதிர்ச்சி சம்பவம்! - vellore money fraud case - VELLORE MONEY FRAUD CASE

vellore money fraud case: வேலூரில் திமுக பிரமுகர் எனக் கூறி, வீட்டை மீட்க கடன் தருவதாக ரூ.14 லட்சத்து 40 ஆயிரம் மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனு கொடுத்த புருஷோத்தமன் புகைப்படம்
மனு கொடுத்த புருஷோத்தமன் புகைப்படம் (credits -ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 7:59 PM IST

மனு கொடுத்த புருஷோத்தமன் வீடியோ (credits -ETV Bharat Tamil Nadu)

வேலூர்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டையைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் தனது வீட்டை அடமானம் வைத்து தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு கரோனா காலகட்டத்தில் கடன் தவணை பணம் சரியான முறையில் செலுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வீட்டை ஜப்தி செய்வதாக கூறியதால், இதுகுறித்து அவரது நண்பர் ஒருவரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவரது நண்பர் புருஷோத்தமனை, சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில் உள்ள திருநாவுக்கரசு என்ற சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான சுமங்கலி பைனான்சியல் கன்சல்டிங் என்கிற நிதி நிறுவன அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, பிரச்னை குறித்து பேசியவர், பல ஆவணங்களை தயார் செய்வதாகக் கூறி சிறுக சிறுக ரூ.14 லட்சத்து 40 ஆயிரம் பெற்றுக் கொண்டுள்ளார்.

இறுதியாக கடன் கிடைக்காது என்பதை அறிந்து கொண்ட புருஷோத்தமன், கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு திருநாவுக்கரசிடம் கேட்டுள்ளார். அப்போது நான் திமுகவைச் சார்ந்தவன், அமைச்சர்கள் எனக்கு நெருங்கிய உறவினர் எனக் கூறி புகைப்படத்தினை காட்டியதுடன், உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று அடியாட்களை வைத்து மிரட்டி திருப்பி அனுப்பியுள்ளார்.

இதனால், தான் ஏமாற்றம் அடைந்ததை அறிந்த புருஷோத்தமன் இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், “அஸ்தம்பட்டியில் உள்ள திருநாவுக்கரசு திமுக பிரமுகர் எனக் கூறி கடன் தருவதாக ரூ.14 லட்சத்து 40 ஆயிரம் மோசடி செய்துள்ளார். பணத்தை திருப்பக் கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டுகிறார். மேலும், துப்பாக்கியை காண்பித்து சுட்டு விடுவேன் என்று கூறுகிறார்” இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புருஷோத்தமன் புகார் அளித்துள்ளார். இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இன்று மீண்டும் தனது பணத்தை பெற்று தருமாறு புகார் மனு கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு.. நெல்லை சிறுவன் சடலமாக மீட்பு - Tenkasi Courtallam Flood

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.