சென்னை: லண்டனில் இருந்து சென்னை வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மென்பொறியாளரை சென்னை விமான நிலைய போலீசா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், விமான பயணிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்ட விசாரனையில், "பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் லண்டனிலிருந்து 289 பயணிகளுடன் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை சென்னை வந்துள்ளது. அதில் சென்னையை சேர்ந்த தம்பதி, 15 வயது மகளுடன் பயணித்துள்ளனர். சிறுமியின் தந்தை லண்டனில் மென்பொருளாளராக இருந்ததால், தாயுடன் லண்டன் சென்றிருந்த சிறுமி, தாய், தந்தை ஆகியோருடன் லண்டனில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார்.
சென்னைக்கு வந்த தம்பதியர் அனைத்து சோதனைகளையும் முடித்து விட்டு சென்னையில் உள்ள தங்கள் வீட்டிற்கு சென்றுள்ளனா். விமானத்தில் பயணம் செய்யும் பொழுதே, சிறுமி மவுனமாக இருந்துள்ளார். வீட்டிற்கு வந்த சிறுமி தனி அறையில் அழுதபடி சோகமாக இருந்துள்ளார். இதனை கவனித்த பெற்றோர், மகளிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது சிறுமி அழுது கொண்டே, விமானத்தில் தனது இருக்கையின் பின் இருக்கையில் அமா்ந்திருந்த ஆண் பயணி, தன்னிடம் மிகவும் மோசமான முறையில், நடந்து கொண்டதாக கூறியுள்ளாா். அதை வெளியில் சொன்னால் பயணிகளுக்கு மத்தியில் அவமானம் ஏற்படும் என்பதால், சகித்துக் கொண்டு சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக பயணித்ததாகவும், அந்த ஆண் பயணி அதை சாதகமாக பயன்படுத்தி தரக்குறைவாக நடந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை இரவு அந்த தம்பதியினர் தங்களது மகளுடன், சம்பவம் குறித்து விமான நிலைய மேலாளரிடம் புகாா் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, விமானநிலைய மேலாளரின் அறிவுறுத்தலின் பேரில் விமான நிலைய காவல் நிலையத்திலும் புகாா் கொடுத்துள்ளனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தியதில் அவர் அயா்லாந்து நாட்டில் மென்பொறியாளராக பணியாற்றி வரும் சென்னையைச் சோ்ந்த ஜாவாஸ் ஜாா்ஜ் (31) என்பது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் அவரை போலீசார் கைது செய்தனா்”. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "திமுக மீதான அதிருப்தி அலை.. பாஜகவுக்கு சாதகமான சூழலாக மாறுகிறது"- பிரதமர் மோடி! - Lok Sabha Election 2024