ETV Bharat / state

எஸ்டி சான்றிதழ் வழங்காமல் அலைக்கழிக்கும் தமிழக அரசு.. மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்கும் மலையாளப் பழங்குடியின மக்கள்! - மக்களவை தேர்தல் புறக்கணிப்பு

Malayali tribal bycotts MP election: கடம்பூர் மலைப்பகுதியில் 100 ஆண்டுகளாக ஜாதி சான்றிதழ் அளிக்காமல் அலைக்கழிக்கும் மலையாளி பழங்குடியின மக்களுக்கு எஸ்டி சான்றிதழ் வழங்கவில்லையெனில் மக்களவைத் தேர்தலைப் புறக்கணிப்பதாக மலையாளி பழங்குடியின மக்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மலையாள பழங்குடியின மக்கள் தீர்மானம்
மலையாள பழங்குடியின மக்கள் தீர்மானம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2024, 9:39 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள கடம்பூர், கல்கடம்பூர், பவளக்குட்டை, அத்தியூர், மாக்கம்பாளையம், குரும்பூர், சின்ன சாலட்டி, காடகநல்லி, திங்களுர், கரளையம் உள்ளிட்ட 82 குக்கிராமங்களில் சுமார் 40 ஆயிரம் மலையாளி எனப்படும் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் வசித்துவரும் மலையாளி எனப்படும் பழங்குடியினருக்குப் பிற வகுப்பினர் என்று குறிப்பிடப்பட்டு ஜாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது.

ஆனால் தருமபுரி, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வாழும் இவர்களின் உறவினர்களுக்கு எஸ்டி சான்றிதழ் அளிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, கடம்பூர், பர்கூரில் வாழும் மலையாளி பழங்குடியின மக்களுக்குப் பிற வகுப்பினர் என சான்றிதழ் வழங்கப்படுவதால், அரசின் சலுகைகள் கிடைக்காமல் பின்தங்கிய நிலையில் உள்ளனர். தமிழகத்தில் வாழும் ஒரே மலையாளி பழங்குடியின மக்களுக்கு வெவ்வேறு மாவட்டத்தில் எஸ்டி என்றும் பிசி என்றும் சான்றிதழ் வழங்கப்படுவதால் வேலைவாய்ப்பு, கல்வி, அரசின் சலுகைகள் கிடைக்கப் பெறுவதில் சிரமம் ஏற்படுவதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இது குறித்து பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் நிறைவேற்றப்படாததனால், மலையாளி பழங்குடியின மக்களின் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் எந்தக் கட்சிக்கும் இனி கிடையாது என்றும், அரசியல் கட்சிகள் தங்களை ஏமாற்றுவதாக அம்மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகவும், அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் கடம்பூர் மலையாளி இன பழங்குடியின சங்கம் சார்பில் முன்னதாக சாலைமறியல், உண்ணாவிரதம், பள்ளிகள் புறக்கணிப்பு என 40 ஆயிரம் பேர் கலந்துகொண்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தின் மூலம், அரசின் கவனத்தை ஈர்த்த நிலையில், நீலகிரி மக்களவை உறுப்பினர் ராசாவிடம் இதுகுறித்து முறையிட்டனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின நலத்துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி, சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

பழங்குடியினருக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகப் பழங்குடியினர் துறையினருக்குத் தெரிவித்த போதிலும் வரும் தேர்தலுக்குள் வழங்காவிடில் தேர்தலைப் புறக்கணிப்பதாக இன்று(பிப்.20) கடம்பூரில் நடந்த பழங்குடியினர் சங்க கொடியேற்று விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடம்பூர் தலைமை சங்கம், கல்கடம்பூர், சாலட்டி, கரளையம், பவளக்குட்டை உள்ளிட்ட 16 இடங்களில் சங்க கொடியேற்றப்பட்டது.

இதையும் படிங்க: நடிகை பற்றி அவதூறு பேச்சு - இயக்குநர் சேரன் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.