ETV Bharat / state

'மக்கள் செல்வன்' பட்டம் எனக்கா? இல்லை விஜய் சேதுபதிக்கா? - டிடிவி தினகரன் ஓபன் டாக் - Lok Sabha elections 2024

TTV Dhinakaran: நடிகர் விஜய் சேதுபதிக்கு அவரது ரசிகர்கள் வழங்கிய 'மக்கள் செல்வன்' எனும் பட்டத்தை டிடிவி தினகரன் பயன்படுத்தி வருவதாக கூறப்படும் நிலையில், தனக்கு இந்த பட்டம் தனது ஆதரவாளர்களால் 2000 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

TTV Dhinakaran
TTV Dhinakaran
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 3, 2024, 9:32 AM IST

தென்காசி: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இம்மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், தென்காசி தனி தொகுதியில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் வேட்பாளர் ஜான் பாண்டியன் பாஜகவின் 'தாமரை' சின்னத்தில் போட்டியிடுகிறார்.

அமமுக பொதுச் செயலாள டிடிவி தினகரன் வேட்பாளர் ஜான் பாண்டியனை ஆதரித்து வாக்கு சேகரிக்க தென்காசிக்கு வந்தார். அப்போது குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "தமிழ்நாட்டின் வளர்ச்சி, தமிழ்நாட்டில் இருக்கும் மக்கள் விரோத ஊழல் ஆட்சியை ஒழிப்பதற்காக ஒரு முன்னோட்டமாக இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணிக்கு வாய்ப்புளிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைப்பது தான் எங்கள் பிரச்சாரத்தின் நோக்கம்.

என்டிஏ கூட்டணிக்கும் மக்கள் மத்தியில் பிரகாசமான வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதியிலும் இக்கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். 1970-களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் அன்றைக்கு முதலமைச்சர் கருணாநிதி அவர்களும்தான் இந்த மாபெரும் வரலாற்றுப் பிழைக்கு காரணம்" என கச்சத்தீவு விவகாரம் குறித்து குற்றம்சாட்டினார்.

மேலும் பேசிய அவர், "சட்டமன்ற உறுப்பினர்களை அடைத்து வைத்தோம் எனக் கூறுவது காழ்ப்புணர்ச்சியால் கூறுவது. சட்டமன்ற உறுப்பினர்கள் சசிகலாவின் கைதானபோது தானாகவே சென்று ரிசார்ட்டில் கூடியிருந்தனர். அதிமுகவை மீட்டெடுப்பதுதான் எனது நோக்கம்.

நடிகர் விஜய் சேதுபதியின் 'மக்கள் செல்வன்' என்ற பட்டத்தைக் கொண்டு தன்னை தொண்டர்கள் அழைப்பதாக சிலர் கூறுகின்றார்கள். எனக்கு இந்த பட்டத்தை, 2000ஆம் ஆண்டில் மக்கள் எனக்கு கொடுத்தனர். விஜய் சேதுபதி எப்போது நடிக்க வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்" எனக் கூறினார்.

"எங்களை தாமரை சின்னத்தில் நிற்க யாரும் நிர்ப்பந்திக்கவில்லை. அண்ணாமலை சொல்வது போல என்டிஏ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகளை மூடி கள்ளுக்கடைகள் திறக்கப்படும். மேலும், தமிழகத்தில் இளைஞர்களையும் மாணவர்களையும் குறிவைத்து போதைப்பொருள் விற்பனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஆளும் கட்சியின் துணையோடு போதைப்பொருள் விற்பனை நடைபெறுகிறது" என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அதிமுக ஆட்சி அதிகாரத்திலிருந்தபோது, சிறுபான்மையின மக்களின் முதுகில் குத்திய ஈபிஎஸ் - கடுமையாகச் சாடிய மு.க.ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.