ETV Bharat / state

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மகாதேவன் அறிவிப்பு! - Justice Mahadevan - JUSTICE MAHADEVAN

Madras HC CJ: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபூர்வாலா வருகிற 23ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளதையடுத்து, உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக உள்ள மகாதேவன் பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் நீதிபதி மகாதேவன் புகைப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் நீதிபதி மகாதேவன் புகைப்படம் (Credits - Madras High Court official website)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 16, 2024, 7:54 PM IST

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர் நாத் பண்டாரி, கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். தொடர்ந்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி துரைசாமி ஓய்வு பெற்றதை அடுத்து, மூத்த நீதிபதியான டி.ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

பின்னர், பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த டி.ராஜா, கடந்த 2023 மே 24ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, அடுத்த மூத்த நீதிபதியாக இருந்த எஸ்.வைத்தியநாதன் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த S.V.கங்காபூர்வாலாவை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.

யார் இந்த நீதிபதி சஞ்சய் கங்கபூர்வாலா: கடந்த 1962ஆம் ஆண்டு மே மாதம் மகாராஷ்டிராவில் பிறந்த நீதிபதி கங்காபூர்வாலா, சட்டப்படிப்பை 1985-ல் முடித்து வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கினார். மூத்த வழக்கறிஞர் எஸ்.என்.லோயாவுடன் இணைந்து வழக்குகளில் வாதாடினார். உரிமையியல் வழக்குகளில் திறமை வாய்ந்த இவர், பல்வேறு தனியார் மற்றும் அரசு வங்கிகளுக்கும் சட்ட ஆலோசகராகபணிபுரிந்தார்.

தொடர்ந்து, கடந்த 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம், மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட கங்காபூர்வாலா, 2022ஆம் ஆண்டு டிசம்பர் முதல் மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்து வந்தார்.

பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன்: கடந்த 2023ஆம் ஆண்டு முதல் தலைமை நீதிபதியாக உள்ள நீதிபதி கங்கபூர்வாலா, மே 23ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளார். இதையடுத்து, புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படும் வரை, சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக உள்ள மகாதேவன், பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை நடைபாதை ஆக்கிரமிப்புக்களை அகற்றக் கோரிய மனு; தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு! - Remove Pavement Encroachment

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.