ETV Bharat / state

மதுரை சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து புகைப்படங்களைத் தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவு! - Madurai Chithirai Festival - MADURAI CHITHIRAI FESTIVAL

Madurai Chithirai Festival: மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Madurai Chithirai Festival
Madurai Chithirai Festival
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 8, 2024, 5:21 PM IST

மதுரை: சிவகங்கையைச் சேர்ந்த மணிகண்டன், மதுரையைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்தனர்.

அதில், "சித்திரைத் திருவிழாவின் போது போதுமான அளவு காவல்துறை பாதுகாப்பு வழங்கவும், மொபைல், மருத்துவ சேவைகளை வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனவும், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் செய்து தரப்படுவதையும் உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு இன்று(ஏப்.8) நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல்துறை ஆணையர் மற்றும் மீனாட்சியம்மன் கோயில், கள்ளழகர் கோயில் தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

மீனாட்சியம்மன் கோயில் தரப்பில், "ஆவணி மூல வீதிகளில் 12,000 பக்தர்கள் கூடுவதற்கு இயலும். ஒவ்வொரு ஆண்டும் இவ்வளவு மக்கள் கூடுவார்கள். ஆங்காங்கே எல்இடி திரைகள் வைக்கப்பட்டு, அதன் மூலமாகப் பக்தர்கள் தரிசனம் வழிவகை செய்யப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை ஆணையர் தரப்பில்,"ஏப்ரல் 21 திருக்கல்யாணம் அன்று, 4 உதவி காவல்துறை, கண்காணிப்பாளர்களின் கீழ் 3,171 காவல்துறையினர் பணியில் இருப்பர். எதிர் சேவையின் போது 1,155 காவல்துறையினர் பணியில் இருப்பர்.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வின் போது 3,430 காவலர்கள் பணியில் இருப்பர். கள்ளழகர் கோயிலுக்குத் திரும்பச் செல்லும் நிகழ்வின் போது 1,375 காவல்துறையினர் பணியில் இருப்பர்" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். அது தொடர்பான புகைப்படங்களுடன் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: "நான் அங்கிருந்தால் கத்தி எடுத்து வெட்டியிருப்பேன்" - வேலூர் பிரச்சாரத்தில் கொந்தளித்த கதிர் ஆனந்த்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.