ETV Bharat / state

சட்டமன்ற நிகழ்ச்சியைக் காண விமானத்தில் வந்த மதுரை அரசு பள்ளி மாணவர்கள்! - STUDENT VISIT TN ASSEMBLY SESSION

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 24, 2024, 3:46 PM IST

Updated : Jun 24, 2024, 6:37 PM IST

Madurai Govt School Student Visit in TN Assembly Session: சட்டமன்ற நிகழ்வுகளை பார்க்க, மதுரையிலிருந்து அரசுப் பள்ளி மாணவர்கள் 10 பேர் முதல்முறையாக விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளனர்.

விமானத்தில் வந்த அரசு பள்ளி மாணவர்கள்
விமானத்தில் வந்த அரசு பள்ளி மாணவர்கள் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைக்கான விவாதம் கடந்த 20ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது இந்த சட்டமன்ற கூட்டத்தொடரை நேரில் காண மதுரையிலிருந்து அரசுப் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்முறையாக விமானம் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அரசு பள்ளி மாணவர்கள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அதாவது, மதுரை மாவட்டம், ரோட்டரி கிளப், மதுரை எம்.ஐ.டி டவுன் என்ற அமைப்பு மூலமாக மதுரை மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த ஒன்பது மாணவ, மாணவிகள் மற்றும் ஊமச்சிகுளம் அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவர் என 10 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, முதல்முறையாக விமானத்தில் சென்னை அழைத்து வந்து, தற்போது நடைபெற்றுவரும் சட்டமன்ற கூட்டத்தொடரை நேரில் காண்பதற்கு திட்டமிடப்பட்டது.

அதன்படி, மதுரையிலிருந்து இன்று விமான மூலம் மாணவர்கள் அனைவரையும் ஆசிரியர் மற்றும் பேராசிரியர் உடன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். சென்னை விமான நிலையத்திலிருந்து தலைமைச் செயலகம் அழைத்துச் செல்ல மெட்ரோ ரயில் மூலமாக புறப்பட்டுச் சென்றனர். மேலும், சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்றுவிட்டு, பிறகு பேருந்து மூலம் மாணவர்களை மதுரை அழைத்துச் செல்லவும்திட்டமிடப்பட்டுள்ளது

முன்னதாக, சென்னை விமான நிலையத்தில், மதுரை அரசுப் பள்ளியில் பயிலும் 9ஆம் வகுப்பு மாணவர் ஶ்ரீகுமரன் கூறுகையில், "முதல் முறையாக விமானத்தில் வந்தது மகிழ்ச்சியாக இருந்தது. விமான நிலையத்திலிருந்து சட்டசபைக்கு செல்கிறோம்.

அங்கு எப்படி விவாதம் நடக்கிறது, அமைச்சர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதை காணவுள்ளோம். அதன் பின்னர் அருங்காட்சியகம், கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களைச் சுற்றிப் பார்த்துவிட்டு, சொந்த ஊர் திரும்ப உள்ளோம். எங்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்தனர். அதில் 10 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னை வந்துள்ளோம்" எனக் கூறினார்.

மதுரை அரசுப் பள்ளி மாணவி சுல்தானா ரபிகா கூறுகையில், "குலுக்கல் முறையில் 10 மாணவ - மாணவிகள் வந்து உள்ளோம். சட்டமன்றத்தை சுற்றிப் பார்க்க போகிறோம். இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.

இதையும் படிங்க: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

Last Updated : Jun 24, 2024, 6:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.