ETV Bharat / state

மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி தற்கொலை! - Madurai Prisoner suicide

Madurai Prisoner suicide: தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சிறை கைதி மதுரை மத்திய சிறைச் சாலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2024, 10:01 AM IST

மதுரை: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கன்னி சேர்வைபட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த தவ ஈஸ்வரன் (28). இவர் சின்னமனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கொலைக் குற்றம் புரிந்ததாக மதுரை மத்திய சிறைச் சாலையில் தண்டனை அனுபவித்து வந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இங்கு ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக தவ ஈஸ்வரன் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) சிறை வளாகத்திற்கு உள்ளேயே தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனைப் பார்த்த சிறைக் காவலர்கள், ஆபத்தான முறையில் இருந்த தவ ஈஸ்வரனை மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இறந்த நபரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து கரிமேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆயுள் தண்டனை சிறை கைதி மதுரை மத்தியச் சிறையில் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை தடுப்பு உதவி எண்
தற்கொலை தடுப்பு உதவி எண் (Credit - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான சிவராமன் உயிரிழப்பு.. தந்தை விபத்தில் இறந்த சோகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.