ETV Bharat / state

விடுப்பு கோரிய காவலரை டிஸ்மிஸ் செய்த உத்தரவு ரத்து - ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு! - constable leave issue - CONSTABLE LEAVE ISSUE

Madurai bench: ஈடுகட்டும் விடுப்பு கோரி வீடியோ வெளியிட்ட காவலரை பணியில் இருந்து நீக்கி டிஜிபி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஐகோர்ட் மதுரைக்கிளை
ஐகோர்ட் மதுரைக்கிளை (Photo Credits - ETV Bharat Tamil nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 16, 2024, 3:59 PM IST

மதுரை: ஈடுகட்டும் விடுப்பு கோரி வீடியோ வெளியிட்ட காவலரை நிரந்தர பணிநீக்கம் செய்தது அதிர்ச்சி அளிக்கிறது என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், ஆயுதப்படை காவலர் அப்துல் காதர் இப்ராஹிம் பணி நீக்கம் செய்து டிஜிபி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஈடுகட்டும் விடுப்பு கோரி மதுரையைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் அப்துல் காதர் இப்ராஹிம் வீடியோ வெளியிட்டுள்ளார். இதனையடுத்து, அவரை பணிநீக்கம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், டிஜிபி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தனக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி அப்துல் காதர் இப்ராஹிம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி பிறப்பித்த உத்தரவில், “மனுதாரர் கடந்த 2021ஆம் ஆண்டு கரோனா காலகட்டத்தில் முகக்கவசம் அணியாமல் பணிக்கு வந்துள்ளார். இதனைக் கேட்ட காவல் ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதேபோல், விடுமுறை நாட்களில் வேலை பார்த்ததற்கு ஈடுகட்டும் விடுப்பு கோரி ஆய்வாளரிடம் விவாதம் செய்துள்ளார்.

மேலும், ஈடுகட்டும் விடுப்பு கோரி முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்து வீடியோவும் வெளியிட்டுள்ளார். இதனால் அவருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்ற நிலையில், அவரை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில், மனுதாரருக்கு துறை ரீதியான தண்டனை வழங்கப்படுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே மூன்று முறை துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முறையான அனுமதி இன்றி விடுப்பு எடுத்தது, அதனை நீட்டித்தது, காவல் விதிகளுக்கு முரணாக தாடி வைத்தது உள்ளிட்டவைக்காக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விடுப்பு கோரி காவலர் பதிவு செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. காவலரின் விதிமீறிய செயல்களுக்கு அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டு உள்ளதாக தோன்றுகிறது.

மனுதாரர் ஆயுதப்படையில் பணியாற்றியவர் என்பதால், அவரிடமிருந்து அதிகபட்ச ஒழுக்கமும், நேர்மையும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அவரை பணியில் இருந்து நீக்கியது அதிர்ச்சி அளிக்கிறது. மனுதாரரின் இளம் வயதை கருத்தில் கொண்டு அவரை பணியில் இருந்து நீக்கிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மதுரை ஆயுதப்படை பிரிவின் உதவி ஆணையர், மனுதாரருக்கு குறைந்தபட்ச தண்டனையை வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்துள்ளார். முன்னதாக இந்த காவலர், தான் தாடி வைத்திருந்தார் என்பதற்காக 3 வருட ஊதிய உயர்வை ரத்து செய்து அரசு உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.