ETV Bharat / state

பேக்கரும்பு அப்துல் கலாம் நினைவிட இட விவகாரம்; 2016-ல் பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை! - Abdul Kalam Memorial land issue - ABDUL KALAM MEMORIAL LAND ISSUE

பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடம் அருகில் உள்ள மாடசாமி கோயில், தெப்பக்குளம் ஆகியவற்றை இணைத்து நினைவிடத்திற்கான இடம் ஒதுக்கியது தொடர்பான அரசாணைக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அப்துல் கலாம் நினைவிடம்
அப்துல் கலாம் நினைவிடம் (Credits - Ramanathapuram district website)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2024, 9:16 AM IST

மதுரை: ராமநாதபுரம் பேக்கரும்பு பகுதியைச் சேர்ந்த சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், “பாம்பன் கிராமம் பேக்கரும்பில் மயானமாக வகைப்படுத்தப்பட்டுள்ள இடத்தின் ஒரு பகுதியில், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடம் அமைந்துள்ளது.

எஞ்சிய இடத்தை மக்கள் அடக்க ஸ்தலமாக பயன்படுத்தி வருகின்றனர். இங்கு மாடசாமி கோயில் மற்றும் தெப்பக்குளம், சுனாமி குடியிருப்பு, சமுதாயக் கூடம் ஆகியவை அமைந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஜூன் முதல் வாரத்தில் வருவாய்த் துறையினர் மாடசாமி கோயிலை அகற்ற முயன்றனர்.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு, மயனாம் என வகைப்படுத்தப்பட்ட மொத்த இடமும், அரசு புறம்போக்கு தரிசு என வகைமாற்றம் செய்து, அப்துல் கலாம் நினைவிடத்துக்காக மத்திய பொதுப்பணித்துறை மற்றும் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக தமிழக அரசு 8.12.2016-ல் அரசாணை பிறப்பித்திருப்பதும் தெரியவந்தது. இதற்கு பாம்பன் கிராம மக்கள் ஒப்புதல் அளித்திருப்பதாகவும், தங்கச்சிமடம் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதாகவும் வருவாய் அதிகாரிகள் அரசுக்கு பொய்யான அறிக்கை அளித்துள்ளனர்.

அந்த அறிக்கை அடிப்படையில் அந்த இடத்தை அப்துல் கலாம் நினைவிடத்துக்கு ஒதுக்கி அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. எனவே, அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். அதுவரை அரசாணையை செயல்படுத்தவும், மயானத்தையும், வண்டிப்பாதையையும் மக்கள் பயன்படுத்த தடை விதிக்கக்கூடாது என்றும், அங்குள்ள கோயில், தகன மேடையை சேதப்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு அப்துல் கலாம் நினைவிடத்திற்கு இடம் ஒதுக்கும் போது மாடசாமி கோயில், தெப்பக்குளம், சுனாமி குடியிருப்பு, சமுதாயக் கூடம் ஆகியவற்றை இனைத்து அரசு அரசாணை பிறப்பித்துள்ளதால், 8.12.2016 அன்று அரசு பிறப்பித்த அரசாணைக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். மேலும், மனு குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.