ETV Bharat / state

TNPSC தேர்வில் போலிச் சான்றிதழ் கொடுத்து முறைகேடு செய்த வழக்கு.. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கெடு! - TNPSC EXAM SCAM ISSUE

2019 ஆம் ஆண்டு குரூப்-1 தேர்வில் போலிச் சான்று கொடுத்த முறைகேடு செய்த வழக்கை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மீண்டும் கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2024, 4:23 PM IST

மதுரை: 2019ஆம் ஆண்டு குரூப்-1 தேர்வில் தமிழ் வழியில் பயின்றோருக்கான இட ஒதுக்கீட்டில் முறைகேடு நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி வழக்கில், விசாரணை செய்ய லஞ்ச ஒழிப்பு துறைக்கு மீண்டும் இரண்டு மாத கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த சக்திராவ் என்ற நபர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2019-ல் நடத்திய குரூப் 1 தேர்வில், தொலை நிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு, தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டு சலுகை வழங்கப்பட்டது.

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீடு, தொலை நிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு வழங்குவது சட்டவிரோதம். இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. ஆனால், அந்த உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. ஆகையால், அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், "இந்த விவகாரம் தொடர்பாக ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் துணை காவல் கண்காணிப்பாளர் விசாரணை செய்து நிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், "மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பயின்ற 4 பேர் போலியான சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளனர். அவர்கள் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சென்னை மெட்ராஸ் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பயின்றோரால் வழங்கப்பட்ட தமிழ் வழியில் பயின்றோருக்கான சான்றிதழ்களில் பிரச்சனை இல்லை. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்று 16 நபர்கள் சான்றிதழை சமர்ப்பித்து உள்ள நிலையில், அவர்களின் 3 நபர்கள் மீது சந்தேகம் உள்ளது. அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டில் லட்சக்கணக்கான ஏழை மாணவர்கள் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற கனவோடு, இரவு நேரங்களில் கண் விழித்து, விளக்கின் வெளிச்சத்தில் மிகவும் சிரமப்பட்டு படித்து தேர்வுகளை எதிர்கொள்கின்றனர். இது போன்று குறுக்கு வழியில் போலியான சான்று வழங்கி தேர்வு எழுதி வெற்றி பெறுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இதுசட்ட விரோதமானது. இது போன்ற ஏழை மாணவர்களின் கனவை புதைக்கும் செயல்" என நீதிபதிகள் தனது கருத்தை பதிவு செய்தனர்.

மேலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை தவிர பிற பல்கலைக்கழகங்களில் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பதிவாளரும் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 2 மாத கால அவகாசத்தை விசாரணை அமைப்புக்கு நீதிமன்றம் வழங்குகிறது. இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை முறையாக நடைமுறைப்படுத்தி, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை 2025 ஜனவரி மாதம் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்... காவல்துறை குறித்து கடும் விமர்சனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.