ETV Bharat / state

ஏர்வாடியில் இசையுடன் சந்தனக்கூடு ஊர்வலம் நடத்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி! - Ervadi Muharram festival - ERVADI MUHARRAM FESTIVAL

Ervadi Muharram festival: நெல்லை ஏர்வாடியில் இசையுடன் சந்தனக்கூடு ஊர்வலம் நடத்தலாம் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ள நிலையில்க் ஒருவரது அடிப்படை உரிமைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளானால், உரிமைகளை நிலைநாட்டுவது மாவட்ட நிர்வாகத்தின் கடமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 16, 2024, 8:42 PM IST

மதுரை: நெல்லை மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த தமீம் சிந்தா மதார் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் 10 நாள் மொஹரம் திருவிழாவை முன்னிட்டு, முதல் நாள் கொடியேற்றத்தின் போதும், ஏழாவது மற்றும் எட்டு நாட்களில் சந்தனக்கூடு ஊர்வலத்தின் போது மேள தாளத்துடன் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறி உள்ளார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில், நீதிபதி சுவாமி நாதன் முன் விசாரணைக்கு வந்தது. நீதிபதி பிறப்பித்த உத்தரவில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடியில் புனிதர்கள் ஹசன் மற்றும் ஹுசைன் நினைவாக தர்கா உள்ளது. இது ஏர்வாடி தர்கா என்று அழைக்கப்படுகிறது. இந்த மசூதியைத் தவிர ஊரில் ஆறு பள்ளிவாசல்கள் உள்ளன. அவர்களில் தவ்ஹீத் ஜமாத் கொள்கையை சேர்ந்தவர்களும் உள்ளனர்.

இஸ்லாம் அதன் தூய மற்றும் அசல் வடிவத்தில் வேறு எந்த மாற்றமும் இல்லாமல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது தவ்ஹீத் குழுவினர் நிலைப்பாடு, எனவே சந்தனக்கூடு ஊர்வலத்தின் போது டிரம்ஸ் அடித்து செல்ல கூடாது என்பது இவர்கள் முடிவு செய்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஊர்வலம் நடத்த எதிர்ப்பு கிளம்பியதை கருத்தில் கொண்டு, தர்கா நிர்வாகத்தால் அவர்களின் திருவிழாவை பாரம்பரிய முறையில் நடத்த முடியவில்லை.

எனவே, இசையுடன் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்து உள்ளார். இந்திய அரசியலமைப்பின் பிரிவு 25 மற்றும் பிரிவு 19 அவர்களுக்கு இந்த உத்தரவாதத்தை வழங்குகிறது. மத நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளை தவிர்க்க முடியாது. கருத்துக்கள் மாறுபடலாம். அதனால்தான், பல்வேறு தத்துவ சிந்தனைப் பள்ளிகள் உள்ளன. நூற்றுக்கணக்கான கிளாசிக்கல் இசைக்கலைஞர்கள் அதே நேரத்தில் பக்தியுள்ள முஸ்லிம்களாக உள்ளனர்.

"மொழி எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்காது என்றால், மதம் வேறுவிதமாக இருக்க முடியாது. கணிதம் மட்டுமே எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும். பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது. மேள தாளங்கள் மற்றும் இசையுடன் ஊர்வலம் நடத்துவது தவ்ஹீத் குழுவின் அடிப்படைவாத உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. வழக்கப்படி முஹர்ரம் பண்டிகையை நடத்தினால், பொது ஒழுங்கு சீர்குலைந்துவிடும் என்று கூறுகின்றனர்.

இதனால், கடந்த பதினான்கு வருடங்களாக குதிரை பஞ்ஜா, சந்தனக்கூடு போன்ற பழக்க வழக்கங்களை இந்த திருவிழாவில் கடைபிடிக்க வில்லை.மனுதாரர் குழு மத ஊர்வலம் செல்வதைத் தடுக்க தவ்ஹீத் ஜமாத்துக்கு உரிமை இல்லை. ஒருவரது அடிப்படை உரிமைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளானால், உரிமைகளை நிலைநாட்டுவதும், உரிமைகளைப் பயன்படுத்துவதில் தலையிடுபவர்களை தடுப்பதும் மாவட்ட நிர்வாகத்தின் கடமையாகும்.

சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை காரணம் காட்டி உரிமையை பயன்படுத்துவதை தடை செய்யும் இலகுவான மற்றும் சோம்பேறித்தனமான விருப்பத்தை மாவட்ட நிர்வாகம் எடுத்தால் அது அவர்களின் இயலாமையை காட்டிக்கொடுக்கும். கடந்த பல ஆண்டுகளாக மத ஊர்வலம் நடத்துவது உட்பட அனைத்து உரிமைகளையும் அனுபவித்து வரும் மதக் குழுக்களின் உரிமையை , பிற கொள்கை உடைய மதக் கட்டமைப்புகள் வழிபாட்டுத் தலங்கள் இருப்பதால் பறிக்க முடியாது. எனவே இசையுடன் சந்தனக்கூடு ஊர்வலம் நடத்தலாம் என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: தேவஸ்தான அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர் பாபு வாக்குவாதம்: திருப்பதியில் நடந்தது என்ன? - anivara asthanam tirupati

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.