ETV Bharat / state

உதவி தாசில்தார் நியமனம் தொடர்பான வழக்கு; ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம்! - Madras High Court - MADRAS HIGH COURT

Madras High Court: தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து தாசில்தார்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 29, 2024, 4:03 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட சீனிவாசன், சுகுமார், ஏழுமலை உள்ளிட்ட 14 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “கடந்த 2008ஆம் ஆண்டு ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட தங்களை, சீனியாரிட்டி அடிப்படையில் உதவி தாசில்தார்களாக நியமிக்க வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார்.

பின்னர் உத்தரவு மாற்றப்பட்டு, மீண்டும் மாவட்ட அளவில் புதிய பட்டியல் தயாரித்து பணிநியமனம் வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி தயாரிக்கப்பட்ட பட்டியலில், உரிய தகுதிகள் இல்லாதவர்களை 2019-2020ல் துணை தாசில்தார்களாக நியமிக்க கிருஷ்ணகிரி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பின்னர், 2012-2022-இல் தேர்வு வாரியத்தால் நியமிக்கப்பட்ட தங்களை நிராகரித்துவிட்டு, தகுதி இல்லாமல் நியமிக்கப்பட்டவர்களை தாசில்தார்களாக நியமிக்க ஆட்சியர் உத்தரவிட்டார். இது குறித்து வருவாய் ஆணையருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், தங்களை நிராகரித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து, பணி நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில், பணி நியமனம் செய்தபோது அனைவரும் உதவியாளர்களாக இருந்ததால் துணை தாசில்தார்களாக நியமிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்தார். மேலும், தேர்வு வாரியத்தால் பணியில் சேர்ந்தவர்களின் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் புதிய பட்டியலை தயார் செய்து, 4 வாரங்களில் பணி நியமனம் நடைபெற வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சென்னையில் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழப்பு - போலீசார் விசாரணை! - Chennai Pub Accident

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.