சென்னை: விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிகம்பம் அமைத்தபோது மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வில் இன்று(ஜூலை 22) விசாரணைக்கு வந்தது.
அப்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில் இச்சமபத்தை ஒரு பாடமாக எடுத்து கொண்டு எதிர்காலத்தில் இதுபோன்று நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்ற பிறகே பேனர்கள் வைக்கப்படும் என அனைத்து அரசியல் கட்சிகளும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், முதலாவதாக திமுக தரப்பு பிரமாணம் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். அதன்பின் வழக்கின் விசாரணையை ஜூலை 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு இதுதான் காரணமா? - சந்தேகம் கிளப்பும் பிஎஸ்பி புதிய மாநிலத் தலைவர்!