சென்னை: திருச்சி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரை உறவினர்களுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கக் கோரி, அவரது உறவினர் தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஆணையருக்கு விண்ணப்பித்துள்ளார்.
ஆனால், கிருஷ்ணகுமார் இறந்து விட்டதாக அரசு பதிலளித்துள்ளது. இதைக் குறிப்பிட்டு, கிருஷ்ணகுமாரை அகதிகள் முகாமில் இருந்து விடுதலை செய்யக் கோரி அவரது உறவினர் நாகேஸ்வரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, உயிரோடு இருக்கும் நபரை இறந்ததாக எப்படி அறிக்கை அளிக்கலாம் எனக் கேள்வி எழுப்பியதுடன், இதுசம்பந்தமாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
இதையும் படிங்க: போதைப்பொருள் கடத்தல் வழக்கு; இருவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு!