ETV Bharat / state

தமிழக அரசு மருத்துவர்களின் சம்பள உயர்வு கோரிக்கை; 6 வாரங்களில் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு! - சம்பள உயர்வு குறித்து தமிழக அரசு

Doctors salary hike: அரசு மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊதிய உயர்வு குறித்து இன்னும் 6 வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

6 வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசு மருத்துவர்களின் சம்பள உயர்வு கோரிக்கை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 1:33 PM IST

சென்னை: மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தை தங்களுக்கும் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்கள், தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு, கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

இந்நிலையில், ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக கடந்த 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை அமல்படுத்தக் கோரி, மருத்துவர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த மனுவை பரிசீலிக்கக் கோரி அரசு மருத்துவர் ஜெயக்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியபோது, 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், அதனை செயல்படுத்த முடியவில்லை என கூறப்பட்டது.

இதனையடுத்து, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அரசு மருத்துவர்களின் கோரிக்கை மனுவை இன்னும் ஆறு வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: மார்ச் 3-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்: கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.