ETV Bharat / state

மத்திய சென்னை தேர்தலுக்கு எதிரான வழக்கு; தயாநிதி மாறன், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு! - Dayanidhi Maran

Dayanidhi Maran: மத்திய சென்னை தொகுதிக்கு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தயாநிதி மாறன் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம்
தயாநிதி மாறன் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2024, 3:43 PM IST

சென்னை: நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில், மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதி மாறன் 2 லட்சத்து 44 ஆயிரத்து 689 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தொகுதியின் தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரி, தேர்தலில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்.

அதில், தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 17ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நாளான்று பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டு திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பிரச்சாரம் மேற்கொண்டதாகவும், இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்துக்கு எதிரானது எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், பிரச்சார செலவு, விளம்பர செலவு, பூத் ஏஜெண்ட்களுக்கு செலவிட்ட தொகையை முறையாக தெரிவிக்கவில்லை எனவும், தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட 95 லட்சம் ரூபாயை விட அதிக தொகையை தயாநிதி மாறன் செலவிட்டதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், மத்திய சென்னை தொகுதியில் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறவில்லை என்பதால் தேர்தலை செல்லாது என உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு தொடர்பாக தயாநிதி மாறன் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 26ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு; நேரில் ஆஜராவதில் விலக்கு அளிக்க எடப்பாடி பழனிசாமி மனு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.