ETV Bharat / state

ஜெய்பீம் படத்தின் உண்மைச் சம்பவ வழக்கு; தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு! - jai bhim movie real incident case - JAI BHIM MOVIE REAL INCIDENT CASE

jai bhim movie real incident case: ஜெய்பீம் படத்தின் உண்மைச் சம்பவத்தில் காவல்துறையினரின் அத்துமீறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி இழப்பீடு வழங்குவது குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெய்பீம் படத்தின் உண்மை சம்பவ வழக்கு
ஜெய்பீம் படத்தின் உண்மை சம்பவ வழக்கு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 20, 2024, 3:39 PM IST

சென்னை: திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கடலூர் மாவட்டம், கம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜகண்ணு என்பவர் காவல்துறையினர் சித்ரவதையில் உயிரிழந்தார். கணவரை மீட்டுத் தரக்கோரி ராஜகண்ணுவின் மனைவி பார்வதி தாக்கல் செய்த வழக்கில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், காவல் துறையினருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில், காவல் துறையினருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

அதேபோல, பாதிக்கப்பட்ட ராஜகண்ணுவின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு இடைக்கால இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இடைக்கால இழப்பீடாக ராஜகண்ணு மனைவிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயும், ராஜகண்ணுவின் சகோதரி ஆச்சிக்கு 50 ஆயிரம் ரூபாயும், ஆச்சியின் மகன் குள்ளனுக்கு 25 ஆயிரம் ரூபாயும், மற்றொரு மகன் குளஞ்சியப்பன் உள்பட ஐந்து பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்பட்டது.

இந்நிலையில், காவல்துறையினரின் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட ராஜகண்ணுவின் உறவினர்களான தங்களுக்கு, பொது சிவில் சட்டப்படி இறுதி இழப்பீடு வழங்கக் கோரி, ராஜகண்ணுவின் சகோதரி ஆச்சியின் மகன் குளஞ்சியப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தனது மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும், சிறப்பு சட்டத்தின் கீழ் வீட்டுமனை மற்றும் நிவாரணங்கள் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இறுதி இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும், சிறப்புச் சட்டத்தின் கீழ் வீட்டுமனை, அரசு வேலை வழங்குவது குறித்த நிலைபாட்டையும் தெரிவிக்கும்படி, தமிழ்நாடு அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். ராஜகண்ணு மரணத்துக்கு நீதி கேட்டு அவரது மனைவி பார்வதி 1993இல் நடத்திய சட்டப் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு தான், நடிகர் சூர்யா, மணிகண்டன் நடிப்பில் ஜெய்பீம் திரைப்படம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மகாவீர் ஜெயந்தி: சென்னையில் நாளை இறைச்சி கடைகளை மூட உத்தரவு! - Mahavir Jayanti Festival

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.