ETV Bharat / state

சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா? அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு! - Savukku Shankar case - SAVUKKU SHANKAR CASE

Madras High Court: கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரை நேரில் விசாரித்த மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் அறிக்கையை நாளை தாக்கல் செய்ய பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சவுக்கு சங்கர், சென்னை உயர் நீதிமன்றம் புகைப்படம்
சவுக்கு சங்கர், சென்னை உயர் நீதிமன்றம் புகைப்படம் (Credit to ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 8, 2024, 7:11 PM IST

சென்னை: போலீஸ் அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டார். தற்போது கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது வலது கை உடைக்கப்பட்டுள்ளதாகவும், சிறையில் அவரை சிறைத் துறையினர் துன்புறுத்தியுள்ளதால், அதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடுவதுடன், உரிய சிகிச்சை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சவுக்கு சங்கரின் தாயார் கமலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, சவுக்கு சங்கரின் தாய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கோவை சிறையில் அடைக்கப்படும் முன் சவுக்கு சங்கர் காயமடையவில்லை எனவும், அதன்பின் சந்தித்த வழக்கறிஞர், அவர் காயமடைந்துள்ளதாக தெரிவித்ததாகவும், அதற்கு முன் அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், எந்தக் காயமும் இல்லை என அறிக்கை அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதை மறுத்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை கோவை அழைத்து வந்த போது தாராபுரம் அருகே விபத்து ஏற்பட்டதாகவும், அதில் சவுக்கு சங்கர் மற்றும் போலீசார் காயமடைந்ததாகவும் தெரிவித்தார். சவுக்கு சங்கரின் இடது கை, வலது கால்பாதம், உதடு ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டதாகவும், பின் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், சிறை மருத்துவரும் அவரை பரிசோதித்து சான்றளித்துள்ளதாகவும், அதுசம்பந்தமான அறிக்கையில் சவுக்கு சங்கர் கையெழுத்திட்டு, கைரேகை பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், சிறைத்துறையினர் தாக்கியதாக குற்றம் சாட்டி கோவை நடுவர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனு, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், சட்டப் பணிகள் ஆணைக் குழு நியமித்த மூன்று வழக்கறிஞர்கள் மற்றும் ஒரு எலும்பு சிகிச்சை நிபுணர் அடங்கிய குழு, ஒரு மணி நேரத்துக்கும் மேல் சங்கரிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது, சவுக்கு சங்கர் மதுரை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் விசாரணை அறிக்கையை பெற்று நாளை (மே 9) தாக்கல் செய்யும்படி சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைய தினத்துக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: கஞ்சா போதையில் பெண் வெட்டிக்கொலை.. எண்ணூரை உலுக்கிய சம்பவம்! - Chennai Woman Murder

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.