ETV Bharat / state

"தணிக்கை செய்யப்பட்ட படத்தை தடை செய்ய யாருக்கும் உரிமை இல்லை" - உயர் நீதிமன்றம் கருத்து! - mhc about censor issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 30, 2024, 10:26 PM IST

Madras High Court: தணிக்கை செய்யப்பட்ட படத்தை தடை செய்ய யாருக்கும் உரிமை இல்லை. ஆட்சேபனைக்குரிய கருத்துகளோ, காட்சிகளோ இருந்தால் தணிக்கைத் துறை திரையிட அனுமதித்திருக்காது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் , கவுண்டம்பாளையம் போஸ்டர்
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கவுண்டம்பாளையம் போஸ்டர் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: நடிகர் ரஞ்சித் நடித்து இயக்கியுள்ள கவுண்டம்பாளையம் திரைப்படத்தை திரையிட்டால் திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்துவோம் என்றும், திரையரங்கை சேதப்படுத்துவோம் என்றும் ஒரு பிரிவினர் எச்சரிக்கை விடுத்து வருவதால், படத்தை திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் பட தயாரிப்பாளர் பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "தமிழகம் முழுவதும் 150 திரையரங்குகளில் இந்த படத்தை திரையிட முடிவு செய்த நிலையில், குறிப்பிட்ட பிரிவினரின் எதிர்ப்பு காரணமாக படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் பயந்து பின்வாங்கி விட்டனர். எந்த சாதி, மத, மொழிக்கு எதிராகவும் இந்த படம் எடுக்கப்படவில்லை. முறையான தணிக்கைச் சான்றிதழ் பெற்ற இந்தப் படத்தை திரையிடுவதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தபோது, “எந்த திரையரங்கு உரிமையாளர்களும் காவல்துறையிடம் புகார் அளிக்கவில்லை. மனுதாரரும் எந்த திரையரங்கத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு தெரிவிக்கவில்லை. 150 திரையரங்குகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது இயலாது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, எந்த திரையரங்குகளில் பாதுகாப்பு தேவை என்பது குறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் மனு அளிக்கும் பட்சத்தில், அந்த திரையரங்குக்கு மட்டும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

மேலும், திரைப்படங்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவது தமிழகத்தில் புதிதல்ல. ஏற்கனவே டேம் 999 என்ற படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. அந்த படத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள் ஏதும் இல்லை. அதேபோல், பாம்பாய் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் தயாரிப்பாளரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

தணிக்கைத் துறையால் தணிக்கை செய்யப்பட்ட படத்தை தடை செய்ய யாருக்கும் உரிமை இல்லை. பொழுதுபோக்காக பார்க்க வேண்டிய திரைப்படத்தை பொழுதுபோக்காக மட்டுமே பார்க்க வேண்டும். ஆட்சேபனைக்கு உரிய கருத்துக்களோ, காட்சிகளோ இருந்தால் தணிக்கைத்துறை எப்படி திரையிட அனுமதித்திருக்கும் என்பதை போராட்டம் நடத்துபவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்” என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: பழனி கோயில் ஆக்கிரமிப்புகள் அகற்ற கோரிய வழக்கு; மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை தாக்கல்! - Palani temple encroachment case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.