ETV Bharat / state

ஃபார்முலா 4 கார் பந்தயம்; எப்ஐஏ சான்று பெற இரவு 8 மணி வரை அனுமதி! - Formula 4 car race Case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2024, 3:28 PM IST

Updated : Aug 31, 2024, 5:09 PM IST

Formula 4 car race Case: ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கான எப்.ஐ.ஏ. சான்று பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரிய நிலையில், இரவு 8 மணி வரை அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கார் பந்த்யத்தயம், சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப் படம்
கார் பந்த்யத்தயம், சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை தீவுத்திடலைச் சுற்றி ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை விதிக்கக் கோரி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாத் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் தலைமையிலான அமர்வு, பந்தயத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

அதேநேரம், கார் பந்தயங்களுக்கு அனுமதி வழங்கும் சர்வதேச அமைப்பான எப்.ஐ.ஏ. சான்றிதழை பந்தயம் நடத்தப்படும் தினத்தில் 12 மணிக்குள் பெற வேண்டும் எனவும், அதன் நகலை மனுதாரருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், எப்.ஐ.ஏ. சான்று பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. மழை காரணமாக பந்தயச் சாலையை ஆய்வு செய்து சான்று பெறுவதற்கான கால அவகாசத்தை 4 மணி நேரம் நீட்டித்து தர வேண்டும் என அவசர முறையீடு விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நீதிபதிகள் சுரேஷ்குமார், பாலாஜி அமர்வில் இன்று (ஆகஸ்ட் 31) மாலை 4 மணிக்கு விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி அறிவித்தார். இந்த நிலையில், இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், வழக்கறிஞர்கள் எட்வின் பிரபாகர் மற்றும் முனியப்பராஜ் ஆகியோர் ஆஜராகினர்.

அப்போது, சில இடங்களில் பணிகள் நடைபெற்று வருவதால் உரிமம் பெற கால அவகாசத்தை இரவு 9 மணி வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், உரிமம் பெறவில்லை என்றால் கண்டிப்பாக போட்டி நடைபெறாது எனவும் உறுதியளிக்கப்பட்டது.

மேலும், சர்வதேச கூட்டமைப்பு சார்பில் 19வது வளைவில் சில மாற்றங்களை செய்ய அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசின் கோரிக்கையை ஏற்று இரவு 8 மணி வரை உரிமம் பெற கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: சென்னை பார்முலா 4 கார் பந்தயம்: முதல் நாள் முழு அட்டவணை!

Last Updated : Aug 31, 2024, 5:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.