ETV Bharat / state

பொய்கரைப்பட்டியில் முத்தரையர் சிலை அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு! - Madras High Court Of Madurai Bench

Madras High Court Of Madurai Bench: மதுரை பொய்கரைப்பட்டி கிராமத்தில் பெரும்பிடுகு முத்தரையர் சிலை அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பதில் மனுத்தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Madras High Court Of Madurai Bench
முத்தரையர் சிலை அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பதில் மனுத்தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் உத்தரவு!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 10, 2024, 5:21 PM IST

மதுரை: மேலூரைச் சேர்ந்த ராஜு என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "மதுரை, சிவகங்கை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான மக்கள் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இந்த சமுதாயம் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தது.

இதில் 29 துணை சமுதாயங்கள் உள்ளன. மொத்தமாக, முத்தரையர் சமுதாயத்தில் 1.60 கோடி மக்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். பெரும்பிடுகு முத்தரையர் மன்னன் மிகவும் பிரசித்தி பெற்றவர். இவரது நினைவைப் போற்றும் விதமாக, மதுரையில் முத்தரையர் சிலையை அமைப்பதற்காக பொய்கரைப்பட்டி கிராமத்தில் இடம் வாங்கி, திட்ட வரைபட அனுமதியும் பெறப்பட்டது.

பின்னர் முத்தரையர் சிலையை வைப்பதற்காக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரிய நிலையில், மனு நிராகரிக்கப்பட்டது. இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, மதுரை பொய்கரைப்பட்டி கிராமத்தில் பெரும்பிடுகு முத்தரையர் சிலை வைக்கவும், மணிமண்டபம் அமைக்கவும் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கிருஷ்ண தாஸ் ஆஜராகி, தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் சிலை வைப்பதற்கு அரசின் அனுமதி தேவையில்லை என்று உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற உத்தரவுகள் உள்ளது. ஆனால், மாவட்ட ஆட்சியர் சிலை வைக்க அனுமதி மறுக்கிறார். இது ஏற்கத்தக்கது அல்ல என வாதிட்டார்.

இதனைப் பதிவு செய்த நீதிபதி, சிலை வைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: "இது பேராபத்து..” - சீமான் கடும் விமர்சனம்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.