சென்னை: மைவி3 ஆட்ஸ் செயலியில் வீடியோ பார்த்தால் ரூ.5 முதல் ரூ.1,500 வரை வரும் எனக் கூறி வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்ததாக, மைவி3 ஆட்ஸ் நிறுவனம் மீது கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி சக்தி ஆனந்தன் தாக்கல் செய்த மனுவை அண்மையில் நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, ஜாமீன் கோரி சக்தி ஆனந்தன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி T.V. தமிழ்செல்வி முன்பு இன்று (ஜூலை 26) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் வழக்கறிஞர் மேக நாதன் ஆஜராகி, சக்தி ஆனந்தனால் 69 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மோசடியில் இவர் தான் பிரதான குற்றவாளி எனவும் கூறினார். எனவே, சக்கி ஆனந்தனுக்கு ஜாமின் வழங்கக் கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சக்தி ஆனந்தனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: தமிழகத்தில் ஐ-பேட்களை தயாரிக்க பாக்ஸ்கான் நிறுவனம் முடிவு! - I Pads in Tamil Nadu