ETV Bharat / state

ஆருத்ரா திருச்சி கிளை இயக்குனரின் ஜாமீன் மனு இரண்டாவது முறையாக தள்ளுபடி! - Aarudhra Trading Cheating

Aarudhra Gold Scam: ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திருச்சி கிளை இயக்குநர் சூசைராஜின் ஜாமீன் மனுவை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆருத்ரா
ஆருத்ரா (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2024, 7:23 PM IST

சென்னை: ஆருத்ரா கோல்ட் டிரேடிங் விவகாரத்தில் 2,438 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதுவரை 23 பேரை கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவரான திருச்சி கிளையின் இயக்குனர் சூசைராஜ், தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், இந்த மோசடிக்கும், தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும், தன்னிடம் இருந்த சேமிப்புத் தொகையை ஆருத்ராவில் முதலீடு செய்திருந்ததாகவும், அந்த பணத்தை மீட்டுத் தரக்கோரி ஆருத்ராவுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சூசைராஜன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், மீண்டும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த நிலையில், இந்த மனு நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மீண்டும் சூசைராஜ் ஜாமீன் மனுவை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிங்க: ஆருத்ரா கோல்டு கிளை மேலாளர்கள் ஜாமீன் மனு தள்ளுபடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.