சென்னை: திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தங்களது நிலத்திற்கு அருகில் உள்ள நிலத்தை வாங்கிய பொள்ளாச்சியைச் சேர்ந்த பிரேமா என்பவர், தங்களது நிலத்துக்கும் சேர்த்து பட்டா கோரியதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனை எதிர்த்து தாசில்தாரிடம் அளித்த புகார் வருவாய் அதிகாரிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி தலையிட்டதால், தங்களது நிலத்தை பிரேமாவுக்கு சாதகமாக மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.சவுந்தர், மனு குறித்து செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் அரசு பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும், திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பிக்கு எதிராக மனுவில் தீவிரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதால், வழக்கில் அவரையும் எதிர்மனுதாரராக இணைக்குமாறு மனுதாரருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: 12 வாரங்கள் கெடு.. ஆக்கிரமிப்பு விவகாரத்தில் தஞ்சை ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் கிடுக்குப்பிடி!