ETV Bharat / state

தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு; ஒத்திவைத்த உயர் நீதிமன்றம்! - Dhoni contempt case - DHONI CONTEMPT CASE

MS Dhoni defamation suit case: ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம், தோனி
சென்னை உயர் நீதிமன்றம், தோனி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 20, 2024, 3:45 PM IST

சென்னை: ஐபிஎல் சூதாட்ட வழக்கில் தொலைக்காட்சி விவாதத்தில் தனக்கு எதிராக அவதூறான கருத்துக்களை பரப்பியதாக, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், ஜீ மீடியா கார்ப்பரேஷன் உள்ளிட்டோருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, 2014ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

மேலும், ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் தொடர்பாக இனிமேல் பத்திரிகைகளில் பேட்டி அளிக்கக்கூடாது என ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவுகளை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த வழக்கு நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தனியார் தொலைக்காட்சி சார்பில், தங்களுக்கு எதிராகவும் இந்த வழக்கு தொடரப்பட்டிருப்பதால், வழக்கில் தங்களை இணைத்து தோனி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தோனி தரப்பு வழக்கறிஞர், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கில் இணைத்து பதிலளிக்க கூறுவதை ஏற்கக்கூடாது. அது வழக்கு விசாரணையை பாதிக்கும். நேரடியாக ஜீ தொலைக்காட்சி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பு அவர்களை எந்த விதத்திலும் பாதிக்காது என தெரிவிக்கப்பட்டது.

தோனி தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தோனி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 20ஆம் தேதி தள்ளிவைத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 20) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தோனி மற்றும் தனியார் தொலைக்காட்சி தரப்பில் வாதம் செய்ய கால அவகாசம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையை செப்டம்பர் 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: நெல்லை தூய்மைப் பணியாளர் உயிரிழந்த விவகாரம்: முதலமைச்சர் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.