ETV Bharat / state

ஆம்ஸ்ட்ராங் உடல் BSP அலுவலகத்தில் அடக்கமா? நாளை விசாரணை! - Armstrong Murder Case

BSP TN Unit: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை கட்சி அலுவலகத்தில் புதைக்க அனுமதி கோரிய மனு மீது நாளை காலை 08.30 மணிக்கு விசாரணை நடைபெற உள்ளது.

Armstrong
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் ஆம்ஸ்ட்ராங் (Credits - ETV Bharat Tamil Nadu and BSP TN Unit FB page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 6, 2024, 8:59 PM IST

Updated : Jul 6, 2024, 9:55 PM IST

சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று மாலை 8 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, செம்பியத்தில் உள்ள அரசு பள்ளி மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை (ஜூலை 7) வைக்கப்பட உள்ளது. அதற்காக பள்ளிக்கூடத்தை காவல்துறை ஆய்வு செய்தனர். இந்த நிலையில், பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பியதாகவும், ஆனால் எந்த முடிவும் தெரிவிக்காததால், கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தரப்பில் பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவனிடம் அவசர முறையீடு செய்தனர்.

இந்த முறையீட்டை ஏற்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் மனுத்தாக்கல் செய்ய அறிவுறுத்தினார். இதனால் மனு மீதான விசாரணை நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு நாளை காலை 08.30 மணிக்கு நடைபெற உள்ளது.

மேலும், இந்த சம்பவத்தில் தாமாக வந்து எட்டு பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இதனையடுத்து, அவர்களுக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு செம்பியம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிபிஜி சங்கர் முதல் ஆம்ஸ்ட்ராங் வரை.. இரண்டாண்டில் தமிழ்நாட்டை உலுக்கிய அரசியல் கொலைகள்!

Last Updated : Jul 6, 2024, 9:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.