ETV Bharat / state

எஃப்ஐஆரில் குறிப்பிடப்பட்ட ‘குரங்கு சரவணன்’.. கடிந்துகொண்ட நீதிமன்றம்! - accused persons pseudonyms issue

Madras Additional Sessions Court: வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு புனைப்பெயர்களை வைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras Additional Sessions Court
Madras Additional Sessions Court
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 3:55 PM IST

சென்னை: கடந்த 2022-ஆம் ஆண்டு, ஜூலை மாதம் சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியில் வழிப்பறி செய்ததுடன், தடுக்க வந்த பொதுமக்களை கற்களைக் கொண்டு தாக்கி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகக் கூறி, 22 வயதான சரவணன் என்பவரை அரும்பாக்கம் காவல் நிலையத்தினர் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரை 'குரங்கு சரவணன்' என முதல் தகவல் அறிக்கையில் காவல்துறையினர் குறிப்பிட்டதற்கு அதிருப்தி தெரிவித்தார்.

மேலும், ஒருவரின் பெயரை மாற்றுவது, அவர்களின் சொந்த விருப்பமாக இருக்க வேண்டுமே தவிர, காவல் துறையினர், மரியாதைக் குறைவான பெயர்கள் வைக்கக்கூடாது என கூறி, வழக்கு ஆவணங்களில் இருந்த 'குரங்கு' என்ற வார்த்தையை நீக்கிட உத்தரவிட்டார்.

இதுமட்டுமல்லாது, பெயர் என்பது நம் அடையாளத்தின் முக்கிய பகுதி என்றும், தனிப்பட்ட கலாச்சாரம், குடும்பம், வரலாற்றுத் தொடர்புகளை ஆழமாக எடுத்துச் செல்பவை பெயர்கள் என்றும் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற புனைப்பெயர்களை வைப்பது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் மனித உரிமையையும், அவர் நிரபராதி என கருதப்படுவதற்கான உரிமையையும் மீறும் வகையில் உள்ளது.

ஆகவே, இது போன்ற புனைப்பெயர்களை வைத்து அழைக்கும் நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும். அதற்கான உரிய அறிவுறுத்தல்களை காவல்துறையின் உயர் அதிகாரிகள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த நீதிபதி, இந்த சம்பவத்தால் பொது அமைதிக்கு இடையூறு ஏற்பட்டதற்கான சாட்சிகள் இல்லாததைக் குறிப்பிட்டு, ஒரு சென்டிமீட்டர் அளவு கூட இல்லாத மூன்று கற்களைப் பயன்படுத்தி கூட்டத்தை அச்சுறுத்தினார் என்ற கதையை எல்.கே.ஜி, யு.கே.ஜி குழந்தைகள் கூட நம்பாது என அதிருப்தி தெரிவித்தார்.

மேலும், வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் நம்பகத்தன்மை இல்லாததாக உள்ளது என்று கூறி, சரவணனை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: முருகன் லண்டன் செல்ல பாஸ்போர்ட் கோரிய வழக்கு: திருச்சி ஆட்சியருக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.