ETV Bharat / state

தேர்தல் 2024: திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸின் கை ஓங்குமா? வெற்றி யார் பக்கம்? - THIRUVALLUR LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election Results 2024 Live Updates: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களின் முன்னிலை நிலவரம் குறித்த தகவல்களை நொடிக்கு நொடி களத்திலிருந்து நேரடியாக வழங்கிக் கொண்டிருக்கிறது ஈடிவி பாரத்.

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்கள்
மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்கள் (GFX Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 1:12 PM IST

Updated : Jun 3, 2024, 5:30 PM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் ஏரிகள் நிறைந்த மாவட்டமாக உள்ளதால் முதன்மைத் தொழிலாக விவசாயம் உள்ளது. நெல், மா, பழ வகைகள், நிலக்கடலை மற்றும் பூ உற்பத்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இங்குள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் அமைந்துள்ள 700-க்கும் மேற்பட்ட வாகனங்கள், உதிரி பாகங்கள் உள்பட பல்வேறு உற்பத்தி தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் முக்கிய பங்கு வகுக்கிறது. இதனால் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதியாகவும் இத்தொகுதி உள்ளது. ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலை, ராணுவத் தளவாடங்கள் மற்றும் பாதுகாப்புப் படை உடைகள் உற்பத்திச் செய்யும் தொழிற்சாலைகள் என்று தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்சாலைகள் இத்தொகுதியில்தான் அமைந்துள்ளன.

திருவள்ளூர் தேர்தல் நிலவரம்: 2008ல் தொகுதி சீரமைப்பிற்குப் பின் திருவள்ளூர் தனி நாடாளுமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது. இந்த தொகுதி கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூந்தமல்லி (தனி), ஆவடி, மாதவரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடங்கியதாகும்.

தொகுதி மறு சீரமைப்புக்குப் பின் 2009, 2014, 2019 இல் மூன்று முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக இருமுறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

அபார வெற்றி பெற்ற காங்கிரஸ்: 2019 நாடாளுமன்ற தேர்தலில், திருவள்ளூர் தொகுதியில் மொத்தம் 13,89,914 வாக்குகள் பதிவாகின. இதில், திமுக கூட்டணியிலிருந்த காங்கிரஸ் கட்சி சார்பாகப் போட்டியிட்ட ஜெயக்குமார் 7,67,292 வாக்குகள் பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட வேணுகோபால் 4,10,337 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் லோகநாதன் 73,731 வாக்குகளும் பெற்றனர். காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் 3,56,955 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

2024 நாடாளுமன்றத் தேர்தல்: தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளில் முதலாவது தொகுதியாகவும், பட்டியலின வேட்பாளர்கள் போட்டியிடும் தனித் தொகுதியாகவும் திருவள்ளூர் தொகுதி உள்ளது. இங்கு மொத்தம் 20,85,991 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 10,24,149, பெண் வாக்காளர்கள் 10,61,457, மூன்றாம் பாலினத்தவர் 385 ஆகியோர் அடங்குவர். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் மொத்தம் 68.59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த தேர்தலில் திமுக, அதிமுக போன்ற முக்கிய கட்சிகள் போட்டியிடாமல், அதன் கூட்டணிக் கட்சிகளை இங்கு களமிறக்கி உள்ளன. அதன்பேரில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில், அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ.வான கு.நல்லதம்பி, பா.ஜ.க சார்பில் பொன் வி.பாலகணபதி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஷ் சந்தர், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் டி.தமிழ்மதி உள்பட 14 பேர் போட்டியில் உள்ளனர்.

மண்ணின் மைந்தர்: திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், பெருமாள்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சசிகாந்த் செந்தில். இவர் ஐ.ஏ.எஸ் முடித்து கர்நாடக மாநிலத்தில் 3 மாவட்டங்களில் 10 ஆண்டுகளாக கலெக்டராக பணிபுரிந்துள்ளார். 2019-இல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றிக்கு தேர்தல் பிரசார யூகம் வகுத்ததில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

விஜயகாந்தின் தீவிர ரசிகர்: சென்னை எழும்பூரைச் சேர்ந்தவரான கு.நல்லதம்பி, நடிகர் விஜயகாந்தின் தீவிர ரசிகர். அப்பகுதியில் மிதிவண்டி கடை நடத்தி வந்த நிலையில், 2011-இல் எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தேமுதிகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார். தற்போது அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டதைத் தொடர்ந்து திருவள்ளூரில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வெளிமாவட்டக்காரர்: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்தவரான பொன் வி.பாலகணபதி, பா.ஜ.க வேட்பாளர் திருவள்ளூரில் களம் கண்டுள்ளார். பா.ஜ.க மாநில பொதுச் செயலாளராக உள்ளவருக்கு இங்கு போட்டியிடக் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது. பிரதமராக மோடி கடந்த 10 ஆண்டுகளாக செய்துள்ள சாதனைகளை எடுத்துக் கூறி தொகுதி மக்களிடையே வாக்கு சேகரித்தார்.

பட்டதாரி வேட்பாளர்: திருவள்ளூர் மாவட்டம், புழல் பகுதியைச் சேர்ந்தவர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர். முதுநிலை பொறியியல் பட்டதாரியான இவர், தனியார் பள்ளியில் ரோபோட்டிக் பயிற்சியாளராக உள்ளார்.

வேட்பாளர்களின் நூதன பிரச்சார உத்திகள்

காங்கிரஸ் பிரச்சாரம்: காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் பொதுமக்களின் தேவைகளை எவ்வாறு அறிய முடியும்? அக்கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்க யாரை அணுக வேண்டும்? என்பது தனக்கு நன்கு தெரியும் என்றும், எனவே வாக்காளர்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய தன்னால் முடியும் என்பதை வாக்காளர்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரித்தார்.

தேமுதிக பிரச்சாரம்: விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு நடைபெற்ற தேர்தல் என்பதால், தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கு.நல்லதம்பிக்கு, அனுதாப வாக்குகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு கொஞ்சம் இருப்பதாக தெரிகிறது. மேலும் எளிமையானவர், எளிதில் அணுகக் கூடியவர் என்ற இமேஜுடன் தொகுதியை வளம் வந்த இவர், பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற பாடுபடுவேன் என்று எடுத்துச் சொல்லி வாக்கு சேகரித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் நல்லதம்பிக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மோடியின் பெயரைச் சொல்லி வாக்கு வேட்டை: பாஜக சார்பில் போட்டியிட்ட பொன் வி.பாலகணபதி, மத்திய அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லியும், மத்தியில் மூன்றாவது முறையாக மோடி தலைமையிலான ஆட்சி அமையும் என்றும் கூறி வாக்கு வேட்டை நடத்தினார். தன்னை எம்.பி.யாக தேர்வு செய்தால் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை எளிதில் நிறைவேற்றுவேன் என்று சொல்லியும் வாக்கு சேகரித்தார்.

கட்சியின் கொள்கைகள்: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் சந்தரும் கட்சியின் கொள்கைகளை வாக்காளர்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரித்தார்.

வெற்றி யாருக்கு? 2019 தேர்தலில் திமுக கூட்டணியில் வெற்றி பெற்றதை போன்று, இம்முறையும் காங்கிரஸ் வெற்றியை தக்கவைத்துக் கொள்ளுமா? தேமுதிக பிரச்சார உத்தி வெற்றி பெறுமா? பாஜக வியூகம் பலிக்குமா? திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யார் பக்கம் என்பது ஜுன் 4 ஆம் நாள் தெரிந்துவிடும்.

இதையும் படிங்க: 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ளுங்கள்...

Last Updated : Jun 3, 2024, 5:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.