சென்னை: நாடளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான வாக்குபதிவு ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்காக இன்று(வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்து தங்களது ஜனநாயக கடைமை ஆற்றி வருகின்றனர்.
வாக்களர்கள் சுலபலமாக வாக்களிக்க வேண்டும் என்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு வகையான நடைவடிக்களை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் வாக்களர்களுக்கு வழங்கப்படும் பூத் சிலிப் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது.
பூத் சீலிப்பில் வாக்காளரின் பெயர், வயது, தொகுதி, தேர்தல் தேதி, வாக்களிக்கும் இடம், அங்குள்ள வரிசை பிரிவு உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடபட்டு இருக்கும். இது வாக்களிக்கும் போது கட்டாயமில்லை என்றாலும், இதில் உள்ள விவரங்களை பயண்படுத்தி வாக்காளர்களின் வரிசை எண், வாக்கு சாவடியின் முகவரி உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: வாக்குச்சாவடிக்கு செல்போன் கொண்டு செல்லலாமா? கெடுபிடி காட்டும் போலீசார்
இந்த விவரங்கள் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக இருக்கும். இதனை வாக்குபதிவு நாள் தொடங்கும் முன்னரே வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வர். ஒரு வேளை பூத் சீலிப் கிடைக்கவில்லை என்றாலும் அதனை இணையதளம் வாயிலாக பதிவிறக்கும் செய்து கொள்ளும் வசதியை அறிமுகம் படுத்தியுள்ளது தேர்தல் ஆணையம்.
- முதலில் https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்தில் பக்கத்திற்கு செல்ல வேண்டும்
- பின்னர் உங்களுடைய மாநிலம் மற்றும் உங்களுக்கு வேண்டிய விருப்ப மொழியை தேர்வு செய்யவும்
- பின்னர் உங்களுடைய வாக்காளர் அடையாள எண் (EPIC எண்) உள்ளிட்டால் பூத் சிலிப் விவரங்கள் தெரியவரும்
குறிப்பு: பூத் சிலிப் அடையாள அட்டையாக பயன்படுத்தி வாக்களிக்க முடியாது. அதனுடன் அரசு அங்கீகாரம் பெற்ற ஆவணங்களை கொண்டு செல்வது முக்கியம்.
இதையும் படிங்க: உங்கள் வாக்குச்சாவடியில் கூட்டம் எப்படி இருக்கு? ஆன்லைனில் அறியலாம்! - LOK SABHA ELECTION 2024