ETV Bharat / state

இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்! தீர்ப்பெழுதப் போகும் மக்கள் - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024 First Phase: நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, மிகவும் விறுவிறுப்படைந்திருந்த அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் தமிழகம் உட்பட 22 மாநிலங்களில் இன்று மாலை 6.00 மணியுடன் முடிவடைகிறது.

Lok Sabha Election 2024 First Phase
தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 17, 2024, 7:30 AM IST

சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. தமிழ்நாடு புதுச்சேரியின் 40 தொகுதிகள் உட்பட மொத்தம் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல் திருவிழாவின் உச்சக்கட்டமான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (ஏப்ரல் 19) நடைபெறுகிறது. இந்த முதல் கட்ட தேர்தலில் நாடு முழுவதும் 21 மாநிலங்களில், 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். 1,625 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இவர்களில் 135 பேர் மட்டுமே பெண்கள். 79 முஸ்லீம் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். 890 பேர் சுயேட்சைகளாக போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக தமிழ்நாட்டின் கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குறைந்த பட்சமாக அசாமின் திருப்ருகர் மற்றும் நாகாலாந்து தொகுதிகளில் 3 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர்.

அதிக வயதான வேட்பாளராக மத்திய பிரதேசத்தின் சித்தி தொகுதியில் 83 வயதான (Eldest Candidate) பகவான் பிரசாத் திவாரி என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். குறைந்த வயது வேட்பாளர்களாக (Youngest Candidate) தமிழ்நாட்டில் 25 வயது வேட்பாளர்கள் 6 பேர் போட்டியிடுகின்றனர். இவர்கள் அனைவருமே சுயேட்சையாக களம் காண்கின்றனர்.

இதையும் படிங்க: ''இத்தனை நாட்களில் செய்யாததை 500 நாட்களில் செய்வோம் என பாஜக கூறுவது எந்த வகையில் நியாயம்?'' - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கேள்வி! - Lok Sabha Election 2024

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 26 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். தமிழ்நாட்டிலிருந்து 30 முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்தலை எதிர்கொள்கின்றனர். முதல் கட்ட தேர்தலை எதிர்கொள்ளுவோரில் 450 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள். இவர்களில் தமிழ்நாட்டில் ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமார் ரூ.662 கோடி சொத்து மதிப்புடன், தமிழ்நாட்டிலேயே அதிக சொத்து மதிப்புடைய வேட்பாளராக உள்ளார்.

இவரைத் தவிர சிவகங்கைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் (ரூ.304 கோடி) , வேலூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் (ரூ.152 கோடி) , சிவகங்கைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் (ரூ.96 கோடி ) சொத்து மதிப்புடன் உள்ளனர். 10 வேட்பாளர்கள் தங்களிடம் சொத்து எதுவுமே இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ரூ.4,650 கோடி பணம், ரூ.2,068 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் - தேர்தல் ஆணையம்! தமிழகத்தில் எவ்வளவு? - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.