ETV Bharat / state

காங்கிரஸிலிருந்து பாஜகவிற்குத் தாவிய விஜயதாரணி.. யார் இந்த விஜயதாரணி? - Vilavancode MLA

Vijayadharani MLA: கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு காங்கிரஸின் தொடர்ந்து 3 முறை சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணியின் அரசியல் பயணத்தை விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு.

Vijayadharani MLA
விஜயதாரணி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 7:56 PM IST

Updated : Feb 24, 2024, 10:18 PM IST

சென்னை: அரசியல் பயணத்தில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற கூற்றுத் தமிழகத்தில் தற்போது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. யாரும், ஏன் அவர் பணியாற்றி வந்த காங்கிரஸ் கட்சியே சற்றும் எதிர்பாராத நேரத்தில், பாஜகவில் இணைந்து தன் விருப்பத்தைத் தீர்க்கமாக வெளிப்படுத்தியுள்ளார் விளவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணி.

முன்னதாக தமிழக பட்ஜெட் கூட்டத்தொடருக்குக் கூட வராமல் டெல்லியில் முகாமிட்டிருந்தது குறித்து தமிழகக் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை விட்டு அவர் என்றைக்குமே செல்லமாட்டார். அந்த அளவிற்குக் காங்கிரஸ் அவருக்குச் செய்திருக்கிறது, இனியும் செய்யும். ஒரு வழக்கிற்காக விஜயதாரணி டெல்லி சென்றுள்ளார் என்று பதிலளித்து ஈரம் காயும் முன்னரே விஜயதாரணி எம்எல்ஏ காங்கிரஸ் கட்சியிலிருந்து நீங்கி பாஜகவில் இணைந்துள்ளார்.

காங்கிரஸில் குடியிருந்து பாஜகவிற்குக் குடியேறிய விஜயதாரணி வரலாறு: "தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி" போன்ற தமிழ் சிறப்புமிக்க பாடல்களை இயற்றிய நாஞ்சில் நாட்டுக் கவிஞரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேத்தியே விஜயதாரணி. 1969ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ம் தேதி மருத்துவக் குடும்பத்தில் பிறந்தவர் தான் விஜயதாரணி. இவரின் தாயார் பகவதி 1977ஆம் ஆண்டில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்ததனால், சிறுவயது முதலே அரசியல் அறிவும், ஆர்வமும் கொண்டுள்ளார்.

ஒன்பது வயதில் தந்தை இறந்துவிட, அதன்பின் தாயின் அரவணைப்பிலே கல்லூரிப் படிப்பை முடிக்கிறார். 1987ஆம் ஆண்டு சென்னை சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே மாணவர் காங்கிரஸில் இணைந்து, தனது 25ஆவது வயதில் இளைஞர் காங்கிரஸில் அதீத ஆர்வம் கொண்டு மாணவர்களுக்கான பணியில் திறம்படச் செயல்பட்டு வந்தார். கட்சிப்பணியில் தீவிரமாகப் பணியாற்றி வந்த விஜயதாரணி கணிப்பொறியாளரான சிவகுமார் கென்னடி என்பவரைத் திருமணம் செய்கிறார். விஜயதாரணி மற்றும் சிவகுமார் தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ள நிலையில், கணவர் சிவகுமார் கென்னடி உடல்நலக்குறைவால் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் காலமானார்.

காங்கிரஸ் பாரம்பரியம் நிறைந்த விஜயதாரணி குடும்பம்: விஜயதாரணியின் தாயார் பகவதி காங்கிரஸ் கட்சியில் முழுநேர நிர்வாகியாகப் பணியாற்றியவர். மருத்துவரான பகவதி, 1977ஆம் ஆண்டில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். ஏன் இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸுக்கும் பகவதி அம்மையாருக்குமான நெருக்கத்தை உணர்த்துகிறது ராஜீவ் கொலைச் சம்பவம். ராஜீவ் கொலை சம்பவத்தன்று விஜயதாரணியின் தாயாரான பகவதியும் அந்தக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அன்று நடந்த அந்தக் கோரச் சம்பவத்தில் பகவதியும் காயமடைந்துள்ளார்.

காயங்களிலிருந்து மீண்ட பகவதி அம்மையாருக்கு அந்தச் சம்பவத்தின் நடுக்கத்திலும் அச்சத்திலும் மீண்டு வர காலங்கள் எடுத்தன. அந்தக் கோரச் சம்பவத்தினால் அவர் காது கேட்கும் திறனை இழந்துள்ளார். அது மட்டுமின்றி அந்தச் சம்பவத்தினால் உடல் நடுக்கம் ஏற்பட்டதையடுத்து அவரால் அவரது மருத்துவத் தொழிலையும் தொடர இயலாமல் போனது. தொடர்ந்து உடல் ரீதியாகப் பல்வேறு பிரச்சனைகளில் அவதிக்குள்ளானதனால் கட்சிப்பணிகளையும் நிறுத்தியுள்ளார். ஆனால் ஏனோ மக்கள் பணியிலும், காங்கிரஸ் ஈர்ப்பும் அவருடன் இருந்தது, அவரது மகள் விஜயதாரணி முதல் முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற போது வெளிப்படுத்தியதன் மூலம் உணரமுடிந்தது போன்ற பல்வேறு தகவல்களை நம்மிடம் முன்னதாக பகிர்ந்துள்ளார் விஜயதாரணி எம்எல்ஏ.

ராஜிவ் காந்தி படுகொலை... என் அம்மாவையும் விட்டுவைக்கவில்லை: எம்.எல்.ஏ. விஜயதாரணி

விஜயதாரணியின் அரசியல் பயணம்: விஜயதாரணி மட்டுமின்றி அவரது தாயாரான பகவதி எனப் பல முக்கிய பொறுப்புகளில் விஜயதாரணியின் குடும்பத்தாரின் பங்கு சற்று நிறைந்தே உள்ளது. தன்னார்வத்தின் அடிப்படையிலோ அல்லது குடும்பத்தின் வழியாகவோ, அரசியல் பயணம் என்பது விஜயதாரணியின் இளம் வயதிலிருந்து அவருடன் பயணித்துள்ளது. தனது அரசியல் பயணத்தை மாணவர் காங்கிரஸில் தொடங்கிய விஜயதாரணி, வெகு நாட்களுக்குப் பின்னர் காங்கிரஸின் முக்கிய நபராக அறியப்பட்டார்.

கட்சியில் அவரது அயராத உழைப்பினால் 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு மகளிர் அணியின் தலைவராகவும், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பொறுப்பு வகித்து வந்தார். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடாவாக 2021ஆம் ஆண்டு மே மாதம் முதல் பாஜகவில் இணையும் ஒரு நொடி முன்பு வரை பொறுப்பு வகித்து வந்தார்.

வலுக்கும் பாஜகவின் கரங்கள்: காங்கிரஸ் கட்சியில் விஜயதாரணி என்ற இடத்திற்கு மாற்று வழியில்லாத நிலையை உருவாக்கினார் விஜயதாரணி. அப்படி 2011, 2016, 2021 எனத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நின்று வெற்றிபெற்று தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக வலம்வந்தார்.

ஆனால் தற்போது, கட்சியின் உட்பூசல் காரணமாகப் பிறப்பிடமாகக் கருதப்படும் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளது காங்கிரஸ் கட்சியினரிடையே மட்டுமின்றி பொதுமக்கள் அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், விஜயதாரணியின் இந்த முடிவு காங்கிரஸ் கட்சியினருக்கு ஒரு பின்னடைவாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி.. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய காரணம் என்ன?

Last Updated : Feb 24, 2024, 10:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.