ETV Bharat / state

கடம்பூர் மலைப்பகுதியில் பேருந்து முன்பு ஹாயாக சென்ற சிறுத்தை.. வைரலாகும் வீடியோ! - Leopard movement in Kadampur hills

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 3:29 PM IST

Leopard movement: கடம்பூர் மலைப்பகுதியில் அரசுப் பேருந்தின் முன்பு தார்சாலையில் நடந்து சென்ற சிறுத்தையால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.

கடம்பூரில் சாலையில் நடந்து சென்ற சிறுத்தை
கடம்பூரில் சாலையில் நடந்து சென்ற சிறுத்தை (credits-ETV Bharat Tamil Nadu)

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் யானை, சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழையும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

சாலையில் நடந்து சென்ற சிறுத்தையின் காட்சி (credits-ETV Bharat Tamil Nadu)

வனக்குட்டைகளில் நீர் வறண்டு போனதால் தண்ணீர் தேடி நீண்ட தூரம் யானைகள் பயணிக்கின்றன. இதற்கிடையே, அண்மையில் பெய்த மழையின் காரணமாக சிறுத்தைகள் வனத்தை விட்டு வெளியே பசுந்தழைகளைச் சாப்பிட வரும் மான்களை வேட்டையாடச் சாலைகளில் திரிகின்றன.

இந்த நிலையில், சத்தியமங்கலம் பகுதியிலிருந்து கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மலைக் கிராமங்களுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள காடகநல்லி மலைக் கிராமத்தில் இருந்து சத்தியமங்கலம் நோக்கிச் செல்லும் அரசுப் பேருந்தானது 30க்கும் மேற்பட்ட பயணிகள் உடன் சென்று கொண்டிருந்துள்ளது.

அப்போது, காடகநல்லி அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள சாலை வழியாக பேருந்து சென்று கொண்டிருந்தபோது, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை மெதுவாக தார்சாலைக்கு வந்துள்ளது. தொடர்ந்து, பேருந்தின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் முன்புறம் மெதுவாக நடந்து சென்றது. சிறுத்தை நடமாட்டத்தைக் கண்ட பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சுமார் ஐந்து நிமிடம் பேருந்தின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் தார் சாலையில் ஜாலியாக நடந்து சென்ற சிறுத்தை, பின்னர் மெதுவாக அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. அப்போது பயணிகள் சிறுத்தை நடமாட்டத்தை தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

கடந்த சில வாரங்களாக கடம்பூர் சாலையில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில், ஒரே சிறுத்தை வேட்டையாடி பழகியதால் அங்கு வருகிறதா அல்லது சிறுத்தை எண்ணிக்கை பெருகி சாலையில் திரிகின்றனவா என வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கோவையில் காட்டு யானைக்கு சிகிச்சை: தொடர் கண்காணிப்பில் வனத்துறை! - Sicked Wild Elephant Treatment

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.