ETV Bharat / state

திடீரென சபாநாயகர் காரை வழிமறித்த வழக்கறிஞர்கள்.. நெல்லையில் நடந்தது என்ன? - Lawyers blocking Speakers car - LAWYERS BLOCKING SPEAKERS CAR

Lawyers blocking Speakers car: திருநெல்வேலியில் காவல்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டு வந்த வழக்கறிஞர்கள் திடீரென சபாநாயகர் காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சபாநாயகர் காரை வழிமறித்து வழக்கறிஞர்கள் போராட்டம்
சபாநாயகர் காரை வழிமறித்து வழக்கறிஞர்கள் போராட்டம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 26, 2024, 9:45 PM IST

திருநெல்வேலி: வழக்கறிஞர் மீது காவல்துறையினர் பொய் வழக்கு போட்டதாக கூறி, காவல்துறையை கண்டித்து பாளையங்கோட்டை- திருச்செந்தூர் சாலையில் வழக்கறிஞர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், அவ்வழியாகச் சென்ற சபாநாயகர் காரை மறித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான பெட்ரின் ராயன் என்பவரை கடந்த மாதம் ஹைகிரவுண்ட் பகுதியில் வைத்து மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக முள்ளான் சையத் அலி உட்பட பலரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், வழக்கறிஞர்
நயினா முகமது மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பொய் வழக்கு போட்டு காவல்துறை வழக்கறிஞரை கைது செய்ததாக குற்றம் சாட்டி திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் நெல்லை மாவட்ட வழக்கறிஞர் சங்கச் செயலாளர் மணிகண்டன் தலைமையில் வழக்கறிஞர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தியும் வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிடாமல் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மாநகர காவல்துறை துணை ஆணையர் ஆதர்ஷ் பச்சோரா தலைமையிலான போலீசார் மீண்டும் வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்களது கோரிக்கைக்கு உடன்படாததால் போராட்டம் தொடர்ந்தது. மதிய உணவு நேரத்தை தாண்டியதால் வழக்கறிஞர்கள் மதிய உணவு ஆர்டர் செய்து சாலையிலேயே அமர்ந்து உணவு அருந்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தூத்துக்குடி விமான நிலையம் செல்வதற்காக நீதிமன்றம் வழியாகச் சென்ற சபாநாயகர் வாகனத்தை, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து சபாநாயகருடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகள் வழக்கறிஞர்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பாதுகாப்பு அதிகாரிகள் வழக்கறிஞர்களை குண்டுகட்டாக வாகனத்தின் முன்னிருந்து அப்புறப்படுத்தி சபாநாயகர் வாகனத்தை அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து, காவல்துறை உயரதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக போராட்டத்தை கைவிடச் செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட வழக்கறிஞரை வெளியில் விட வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

முன்னதாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் மண்டல அளவிலான பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று 123 பயனாளிகளுக்கு ரூ.47 கோடியே 20 லட்சம் மதிப்பில் கடனுதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அப்போது பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், “உலக தொழில் முதலீட்டு மாநாட்டை போல் உலக ஸ்டார்ட் அப் தொழில் முனைவோர் மாநாடு வருகிற பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் 39 ஆயிரம் தொழில் முனைவோர் மட்டுமே உருவாக்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் மூன்று ஆண்டுகளில் 30 ஆயிரம் தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: "இறக்கும் தருவாயில் 20 பேரை காப்பாற்றிய என் மகன்"- தந்தை பெருமிதம்! - Driver saved children and died

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.