ETV Bharat / state

"புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மீண்டும் நாடாளுமன்றத்தில் விவாதம் செய்க" - வழக்கறிஞர்கள் சங்கம் கோரிக்கை! - new criminal laws - NEW CRIMINAL LAWS

New Criminal Laws: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை நாடாளுமன்றத்தில் மீண்டும் விவாதிக்க வேண்டுமென வழக்கறிஞர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலசுப்ரமணியன் புகைப்படம்
பாலசுப்ரமணியன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 7, 2024, 5:10 PM IST

Updated : Jul 7, 2024, 6:54 PM IST

திருச்சி: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழுவின் அவசர பொதுக்கூட்டம் கடந்த ஜூன் 29ஆம் தேதியன்று விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. அதில் புதிதாக வடமொழி தலைப்புடன் புதிய சட்டமாக்கப்பட்டுள்ள பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023 மற்றும் பாரதிய சாக்ஷியா அதினியம் 2023 ஆகிய 3 சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுதல் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த தீர்மானத்தில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் வழக்கறிஞர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து வழக்கறிஞர்கள் சார்பில் நாளை (ஜூலை 8) திருச்சியில் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது.

இது தொடர்பாக திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் பாலசுப்ரமணியன், "மாநிலம் முழுவதும் இருந்து 3,000க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொள்ளும் பேரணி திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டு எம்ஜிஆர் சிலை வழியாக தென்னூர் உழவர் சந்தை மைதானம் வரை நடைபெறும். பேரணிக்குப் பிறகு கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும்.

இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய சட்டத் திருத்தம் தொடர்பாக விவாதம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டத்திற்கான போராட்டம் குறித்து முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். இந்த புதிய சட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தண்டனைகள் அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்கது.

அதேநேரம், காவல்துறைக்கு சில சரத்துகள் அதிக வரம்பு உள்ளது. மீண்டும் நாடாளுமன்றத்தில் இந்த 3 புதிய சட்டங்களை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு அதில் உள்ள குறைகளை களைய வேண்டும்" என தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது வழக்கறிஞர் நிர்வாகிகள் சுகுமார், சுதர்சன், முத்துமணி, ஜாக் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: பெயரில் மாற்றம் தேவை.. செயல்பாட்டில் எப்படி? புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஓய்வு பெற்ற காவல் ஆணையாளர் கூறுவது என்ன?! - three new criminal laws

Last Updated : Jul 7, 2024, 6:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.