ETV Bharat / state

மறைந்த எழுத்தாளர் ஞானபாரதி உடல் கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு தானம்! - Lawyer Gnanabharathi body donate - LAWYER GNANABHARATHI BODY DONATE

உடல் நலக்குறைவால் உயிரிழந்த மூத்த வழக்கறிஞரும், எழுத்தாளருமான ஞானபாரதியின் உடல் கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.

ஞானபாரதியின் குடும்பத்தினர், வழக்கறிஞர் ஞானபாரதி
ஞானபாரதியின் குடும்பத்தினர், வழக்கறிஞர் ஞானபாரதி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2024, 10:49 PM IST

கோயம்புத்தூர்: தான் இறந்து விட்டால் தனது உடலை மருத்துவ மாணவர்களின் படிப்பிற்காக வழங்கிட வேண்டும் எனத் தெரிவித்திருந்த நிலையில், அவரது விருப்பப்படி இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடல் தானமாக வழங்கப்பட்டுள்ளது. ஞானபாரதியின் உடலை ESI மருத்துவமனையில் மருத்துவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பெற்றுக்கொண்டனர்.

வடவள்ளி நவாவூர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானபாரதி (76). கோவை நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான ஞானபாரதி, உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இந்நிலையில், தான் இறந்து விட்டால் உடலை மருத்துவ மாணவர்களின் படிப்பிற்காக வழங்கிட வேண்டும் என ஏற்கனவே தெரிவித்துள்ளார். அதன்படி, அவரது உடல் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளராக இருந்த ஞானபாரதி சட்டம் படித்து வழகறிஞரானார். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களுக்கு ஆதரவாக வாதாடி அவர்களுக்கு விடுதலையும் பெற்றத் தந்தவர் ஞானபாரதி. அடித்தட்டு ஏழை மக்கள் மற்றும் தொழிலாளர்களுக்காக வழக்குகளில் ஆஜராகி அவர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுத்தவர் ஞானபாரதி.

ஞானபாரதியின் உடலை ESI மருத்துவமனையில் மருத்துவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பெற்றுக்கொண்டனர். அப்போது வழகறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முழுக்கம் எழுப்பினா். இறந்த பின்னரும் தனது உடல் சமூகத்திற்கு பயன்பட வேண்டும் என நினைத்து அதையும் செயல்படுத்தி சென்றுள்ளார் ஞானபாரதி.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: எம்.ஆர்.விஜயபாஸ்கர் சகோதரர் சேகர் பழனியில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.