ETV Bharat / state

சட்டத்துறை மானியக் கோரிக்கையில் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகள்! - TN Assembly Session 2024 - TN ASSEMBLY SESSION 2024

Tamilnadu Assembly 2024 Session: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ரகுபதி (credits-ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 25, 2024, 2:12 PM IST

சென்னை: நடப்பாண்டிற்கான (2024 -25) சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகின்றது. அந்த வகையில், நேற்று (ஜூன் 24) பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கை குறித்த நான்காம் நாள் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது, சட்டப்பேரவையில் சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவையாவன பின்வருமாறு:-

1) திண்டுக்கல் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் புதியதாக அமைத்தல்.

2) கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் ஒரு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் புதியதாக அமைத்தல்.

3) கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் ஒரு மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் புதியதாக அமைத்தல்.

4) புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தற்போது இயங்கி வரும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தைப் பிரித்து தனித்தனியாக ஒரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும் ஒரு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றமும் அமைத்தல்.

5) திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்காக, போதை மருந்துகள் 1985-ன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிப்பதற்கென, திருநெல்வேலியில் ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைத்தல்.

6) கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் ஒரு கூடுதல் குடும்ப நல நீதிமன்றம் அமைத்தல்.

7) மதுரையில் ஒரு கூடுதல் குடும்ப நல நீதிமன்றம் அமைத்தல்.

8) அத்தியாவசிய பொருட்கள் சட்டம், 1955-இன் கீழ் நுகர்ப்பொருள், குற்றப் புலனாய்வுத் துறையால் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிப்பதற்கென, சென்னையில் ஒரு சிறப்பு பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைத்தல்.

9) 1881 - ஆம் ஆண்டின் மாற்றுரிமை ஆவணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிப்பதற்கென செங்கல்பட்டில் ஒரு விரைவு நீதிமன்றம் அமைத்தல்.

10) சென்னை உயர்நீதிமன்ற முதன்மை ஆயம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையின் பயன்பாட்டிற்காக மின்கலத்தால் (Battery) இயங்கக்கூடிய நான்கு சக்கர வாகனங்கள் தலா இரண்டு வீதம், 4 வாகனங்கள் ரூ.27.72 இலட்சம் செலவினத்தில் வாங்குதல்.

11) பட்டறைப்பெரும்புதூர் மற்றும் புதுப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அரசு சட்டக்கல்லூரிகளில் முறையை 5 ஆண்டு மற்றும் மூன்றாண்டு சட்டப்படிப்புகள் 2024 - 2025 ஆம் ஆண்டு கல்வி ஆண்டு முதல் தொடங்குதல்.

12) ஆறு அரசு சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சட்டப் படிப்புகளில் தலா 40 மாணவர்கள் வீதம் மொத்தம் 480 மாணவர்களை கூடுதலாக அனுமதித்தல்.

13) அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் வள மேலாண்மை திட்டம் உருவாக்குதல்.

14) அரசு சட்டக்கல்லூரி மாணவர்களின் தொழில்முறை திறன் மேம்படுத்தும் வகையில் அனைத்து அரசு சட்டக்கல்லூரிகளில் பயிற்சி பேராசிரியர் என்ற சிறப்பு திட்டம் நடைமுறைப்படுத்துதல்.

15) அரசு சட்டக் கல்லூரிகளில் சட்டத்தமிழ் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்துதல்.

16) சீர்மிகு சட்டப்பள்ளியில் புதிதாக இரண்டு முதுகலை சட்டப் படிப்புகள் அறிமுகப்படுத்துதல்.

17) சீர்மிகு சட்டப்பள்ளியில் மாணவர் மற்றும் ஆசிரியர் பரிமாற்ற திட்டம் செயல்படுத்தப்படும்.

18) சீர்மிகு சட்டப்பள்ளி மாணவர்களுக்கு விடுதிக் கட்டடம் கட்டுதல்.

அடுத்ததாக உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வளர்க்காடு மொழியாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்து அமைச்சர் ரகுபதி பேசியதாவது,

"சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்திடம் தொடந்து வலியுறுத்தி வருகிறது. இது குறித்து உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடமும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கோரிக்கையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குழு நிராகரித்துள்ளது.

இதனை தொடர்ந்து மத்திய சட்டத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழி வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக்கும் கோரிக்கை மனு மத்திய நீதித்துறையின் மறுபரிசீலனையில் உள்ளது. மத்திய அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கருணாநிதியின் பெயரில் புதிய விருது.. சட்டப்பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.