ETV Bharat / state

'நாங்கள் பொறுப்பல்ல'.. கோவையில் மின்சாரம் பாய்ந்து குழந்தைகள் உயிரிழப்புக்கு மின் வாரியம் விளக்கம்! - coimbatore kids electrocuted - COIMBATORE KIDS ELECTROCUTED

Coimbatore kids electrocuted case: கோவை ராணுவ வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மின்சாரம் பாய்ந்து குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் குடியிருப்போர் சங்கத்தின் பாதுகாப்பு குறைபாடே காரணம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Park
பூங்கா (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 24, 2024, 4:52 PM IST

கோயம்புத்தூர்: கோவை சரவணம்பட்டியில் இருந்து துடியலூர் செல்லும் சாலையில் ராணுவ வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் அவர்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த குடியிருப்பில் வசித்து வரும் பிரசாந்த் என்பவரின் மூத்த மகன் ஜியான்ஸ் ரெட்டி (6), பாலச்சந்தர் என்பவரின் மகள் பிரியா (8) ஆகிய இரு குழந்தைகளும் நேற்று மாலை அங்குள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

மாலை 6.50 மணி அளவில் சறுக்கு விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அக்குழந்தைகள் உயிரிழந்தனர். குழந்தைகள் ஜியான்ஸ் ரெட்டி, பிரியா ஆகிய இருவரின் உடல் சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யபட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மின்சாரம் தாக்கி குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் இயற்கைக்கு மாறான சந்தேக மரணம் என்ற சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விபத்து ஏற்பட்ட சரவணம்பட்டி ராணுவ வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் உள்ள பூங்காவில் மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

ஆய்வு முடித்து வெளியில் வந்த அதிகாரிகளிடம் விபத்துக்கான காரணம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய அதிகாரிகள், “குடியிருப்போர் நலச் சங்கத்தினரின் அஜாக்கிரதை காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தனர். தொடர்ந்து பேசியவர்கள், “குடியிருப்பு வளாகத்தில் குழந்தைகள் பூங்காவை மேம்படுத்தி இருக்கின்றனர். பூங்காவை மேம்படுத்தும் போது பூங்காவின் கீழே மின் கேபிள்களை போட்டு இருக்கின்றனர்.

இந்நிலையில், தெருவிளக்கை ஆன் செய்யும்போது மின்சாரம் பாய்ந்து குழந்தைகள் இறந்திருக்கின்றனர். இந்த இடம் மின்வாரிய பொறுப்பு கிடையாது என கூறிய அதிகாரிகள், அவர்களின் பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது என்றும், தெருவிளக்கை அவர்கள் தான் பராமரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும், விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதால் ஆய்வு செய்ய வந்ததாகவும், இதை அறிக்கையாக உயரதிகாரிகளுக்கு தெரிவிக்க இருப்பதாகவும் கூறினர். இதனிடையே, பிரேத பரிசோதனைக்குப் பின்பு சிறுவன் ஜியான்ஸ் உடல் அவர்களது சொந்த ஊரான ஆந்திராவிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. குழந்தை பிரியாவின் உடல் கோவை மின்மயானத்தில் எரியூட்டப்பட்ட உள்ளது.

இதையும் படிங்க: ரீமால் புயல்: 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.. மீனவர்களுக்கு எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.