அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமியிடம், 31 வயதுடைய கூலி தொழிலாளி ஒருவர் சிறுமியிடம் நெருங்கிப் பழகி, பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் அவரிடம் இருந்து தப்பி வந்த சிறுமி பெற்றோரிடம் அழுது கொண்டே நடந்ததை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 31 வயதுடைய கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 6 சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல் அளித்த அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை..!