ETV Bharat / state

100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் - பிரசார் பாரதி ஊழியர்களிடம் எல்.முருகன் வலியுறுத்தல்! - Central Minister L Murugan

Public Service Broadcaster Prasar Bharati: வாக்காளர்களை கவரவும், 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யவும் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கவும் நிகழ்ச்சித் திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பிரசார் பாரதி ஊழியர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

minister-l-murugan-speech-south-regional-study-meeting-on-broadcasting-facility-network-of-akashvani-in-chennai
100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும்; பிரசார் பாரதி ஊழியர்களிடம் எல்.முருகன் வலியுறுத்தல்..
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 7:23 PM IST

சென்னை: சென்னை ஆகாச வாணியின் ஒலிபரப்பு வசதி நெட்வொர்க் பற்றிய தென்மண்டல ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசும்போது, "நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, அனைத்து மொழிகளிலும் நிகழ்ச்சிகளை தயாரித்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பது அகில இந்திய வானொலியின் நோக்கம் ஆகும்.

இதனை உணர்ந்து ரேடியோ ஜாக்கிகளும், பிரசார் பாரதி ஊழியர்களும் நிகழ்ச்சிகளை தயாரிக்க முன்வரவேண்டும். பிரதமர் நரேந்திர மோடி, மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் மக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றுக்கு தீர்வு காண வழி வகுக்கிறார். பிரதமர், வானொலிக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறார் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்” என்று எல்.முருகன் தெரிவித்தார்.

மேலும், தூர்தர்ஷன் பொதிகை என்பதை தூர்தர்ஷன் தமிழ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, நிகழ்ச்சிகளின் உள்ளடக்கத்தை மாற்றியிருப்பதன் மூலம், தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றியிருக்கிறார் எனத் தெரிவித்தார்.

மத்திய அரசின் சாதனைகள், மக்கள் நலத்திட்டங்கள் போன்றவற்றை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், இமயமலைப் பகுதி உள்பட எல்லைப் பகுதிகளில் வானொலி ஒலிபரப்புக்கான அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு பிரதமர் மோடி, ரூ.2,500 கோடி நிதி வழங்கியிருப்பதை எல்.முருகன் நினைவு கூர்ந்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், அகில இந்திய வானொலியின் முதன்மை தலைமை இயக்குனர் வசுதா குப்தா மற்றும் அதிகாரிகள், சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் எம்.அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: மோடிக்கு செங்கோல் கொடுத்த ஆதீனத்திற்கு மிரட்டல் - பாஜக மாவட்டத்தலைவர் தலைமறைவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.