டெல்லி: தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்த குஷ்பூ, பாஜக பிரமுகராக தற்போது அறியப்படுகிறார். மேலும், அவர் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார். அவ்வப்போது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் சம்பவங்கள் குறித்து கண்டனம் தெரிவிக்கும் குஷ்பூ, பல நேரங்களில் நேரில் சென்றும் விசாரணை நடத்தி வந்தார்.
இந்த நிலையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை குஷ்பூ ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக குஷ்பூவிடம் இருந்து பெறப்பட்ட ராஜினாமா கடிதத்தினை ஏற்றுக் கொண்டதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக இயக்குனரிடம் இருந்து பெறப்பட்ட கடிதத்தின் அடிப்படையில், அவரது ராஜினாமா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சியில் கறார் காட்டிய குஷ்பூ.. 'மெத்தனால் இருந்த ஆதாரம் எங்கே'.. கேள்விகளை அடுக்கிய கமிஷன்!