ETV Bharat / state

"பாஜகவுக்கு வாக்களிப்பதும் அதிமுகவும் வாக்களிப்பதும் ஒன்றுதான்" - கரூர் எம்பி ஜோதிமணி! - Karur MP Jothimani - KARUR MP JOTHIMANI

Jothimani:மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த காங்கிரஸ் உறுப்பினர்களை பாஜக அரசு இடைநீக்கம் செய்தது என கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.

KARUR MP JOTHIMANI
KARUR MP JOTHIMANI
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 28, 2024, 1:03 PM IST

கரூர் எம்பி ஜோதிமணி பேச்சு

கரூர்: கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சி செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் திமுக மேலிடப் பொறுப்பாளர் எம்பி அப்துல்லா தலைமையில் நடைபெற்றது.கரூர்-கோவை சாலையில் உள்ள பிரேம் மஹாலில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இந்த கூட்டத்தில், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, எம்எல்ஏகள் இளங்கோ, சிவகாமசுந்தரி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி பிரதிநிதிகள் மற்றும் செயல்வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேசுகையில்," ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம், மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மத்தியில் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் உள்ள அதிமுக, மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டம் மசோதாவைக் கொண்டு வந்த போது அது மக்களுக்கு எதிரான சட்டம் என்று தெரிந்தும் அதிமுக உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.

தமிழகத்துக்கு வெள்ள நிவாரணத்தொகை ஒரு பைச கூட வழங்க முடியாது என மத்திய அரசு அறிவித்தது. அப்போது, ஏன் எடப்பாடி பழனிச்சாமி பிரதமருக்கு எதிராக போராடவில்லை. இப்போது நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாரதிய ஜனதா கட்சி தனித்தனியாக தேர்தலில் போட்டிப் போடுகின்றனர். அதிமுகவுக்கு வாக்களிப்பதும்,பாஜகவுக்கும் வாகளிப்பதும் ஒன்றுதான்.

கரூரில் நிறுத்தப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் மூன்று மொழிகளில் நாடளுமன்றத்தில் பேசுவேன் என பெருமையாகக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார். எத்தனை மொழிகளில் பேசுகிறோம் என்பது முக்கியமில்லை எதைப் பற்றிப் பேசுகிறோம் என்பது தான் முக்கியம்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,"பத்தாண்டு கால பாஜக ஆட்சியில், வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த காங்கிரஸ் உறுப்பினர்களை பாஜக அரசு இடைநீக்கம் செய்தது. நாடாளுமன்றத்தில் எந்த மொழியில் பேசுகிறோம் என்பது முக்கியமில்லை எதற்காக பேசினோம் என்பது தான் முக்கியம்.

5 ஆண்டுகாலக கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் ஆற்றிய மக்கள் பணி குறித்து குறை சொல்ல ஏதும் இல்லை என்பதால், தொகுதி பக்கம் வராத காங்கிரஸ் எம்பி ஜோதிமணி என பிரச்சாரம் செய்கின்றனர். தினந்தோறும் தான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய பணிகள் அனைத்தும் ஊடகங்களில் வந்தது.

அதேபோல நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியைக் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு நவீன வகுப்பறைகள் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்காக செலவு செய்துள்ளேன். பாஜக அரசு அமலாக்கத்துறையை வைத்து,செந்தில் பாலாஜியை 9 மாதங்கள் சிறையில் அடைத்து, அவரது மன வலிமையை ஒடுக்க நினைக்கிறது.

ஆனால் அது முடியாது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். அதுதான் இந்த தேர்தலில், பாஜக அரசுக்கு அளிக்கும் பதிலடியாகும்" என இவ்வாறு ஜோதிமணியை பேசினார்.

இதையும் படிங்க: அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் இந்தாண்டு முதல் கவுன்சிலிங் முறையில் மாணவர் சேர்க்கை! - Aided College Admission

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.